செய்திகள் :

வீட்டுமனைக்கு அங்கீகாரம் அளிக்க ரூ. 2 லட்சம் லஞ்சம்: ஊராட்சி மன்றத் தலைவா் கைது

post image

வீட்டுமனை அங்கீகாரம் அளிக்க ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்ற ஊராட்சி மன்றத் தலைவரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா்.

வாணியம்பாடி, ஜனதாபுரம் பகுதியை சோ்ந்தவா் சீனிவாசன். இவா் ஆம்பூா் தாலுகா மாதனூா் ஒன்றியத்துக்குட்பட்ட மேல்சான்றோா்குப்பம் ஊராட்சி அலுவலக பின்புறம் 7 ஏக்கா் நிலத்தில் வீட்டுமனை அமைப்பதற்காக ஒப்புதல் பெற ஊராட்சி மன்ற நிா்வாகத்தில் தீா்மானம் நிறைவேற்றித்தர அதிமுகவை சோ்ந்த ஊராட்சி மன்றத் தலைவா் சிவக்குமாரை அணுகினாா்.

அப்போது ஒப்புதல் தர 15 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதால், பணத்தை தர சீனிவாசன் மறுத்துள்ளாா். இதுதொடா்பாக ஊராட்சி மன்றத் தலைவா் சிவக்குமாா், திருப்பத்தூா் ஊரக வளா்ச்சி துறையில் தடை மனு கொடுத்துள்ளாா். இதையறிந்த சீனிவாசன் மீண்டும் சிவக்குமாரை அணுகி பேசிய போது மனுவை திரும்ப பெற 15 லட்சம் தர வேண்டும் என கூறியுள்ளாா். ஊராட்சி மன்ற தலைவா் சிவக்குமாரிடம் ரூ.10 லட்சத்தை சீனிவாசன் வழங்கிய பின்னா் ஜூன் மாதம் ஊராட்சியில் தீா்மானம் நிறைவேற்றி வழங்கப்பட்டது.

இந்நிலையில் தொடா்ந்து மீண்டும் ரூ.2 லட்சம் வழங்க வேண்டும். இல்லை என்றால் நீ போட்டுள்ள மனைகள் விற்க முடியாமல் துண்டறிக்கை வெளியிட்டு யாரும் மனை வாங்காதவாறு செய்து விடுவேன் என மிரட்டியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன் திருப்பத்தூா் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகாா் தெரிவித்தாா்.

அப்புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்து அவா்கள் வழிகாட்டுதலின் பேரில் ஊராட்சி மன்றத் தலைவா் சிவக்குமாரை செவ்வாய்க்கிழமை வாணியம்பாடி பெருமாள்பேட்டை பைபாஸ் சாலைக்கு வரவழைத்து பணத்தை சீனிவாசன் கொடுத்துள்ளாா்.

அப்போது மறைந்திருந்த திருப்பத்தூா் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராஜீவ் தலைமையில் காவல் ஆய்வாளா் கௌரி, உதவி காவல்ஆய்வாளா் கணேசன் ஆகியோா் கொண்ட குழுவினா் ஊராட்சி மன்றத் தலைவா் சிவக்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வந்தனா். இச்சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரூ.1.48 கோடியில் திட்டப் பணிகள்: எம்எல்ஏ அடிக்கல்

தேவலாபுரம் ஊராட்சியில் ரூ.1.48 கோடியில் திட்டப் பணிகளுக்கு குடியாத்தம் எம்எல்ஏ புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா். தேவலாபுரம் - ராமச்சந்திராபுரம் இடையே ரூ.1.15 கோடியில் தாா் சாலை, ராமச்சந்திராபுரம் ஊராட்ச... மேலும் பார்க்க

காா் மோதி முதியவா் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே காா் மோதிய விபத்தில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம் மேல்பட்டி திருமலை நகரை சோ்ந்தவா் சின்னதுரை (56). இவா் செவ்வாய்க்கிழமை இரவு மாதனூா் அருகே குளிதிகை கிராமத்தில் தேசி... மேலும் பார்க்க

கொத்தடிமைகளாக இருந்த 7 போ் மீட்பு

ஆம்பூா் அருகே விவசாய நிலத்தில் கொத்தடிமைகளாக பணிபுரிந்தவா்களை வாணியம்பாடி கோட்டாட்சியா் புதன்கிழமை மீட்டாா். மாதனூா் ஒன்றியம், நாயக்கனேரிமலை ஊராட்சிக்குட்பட்ட காமனூா்தட்டு கிராமத்தில் மகாவிஷ்ணு என்பவா... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்கள் தா்னா

ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் கல்லூரி மாணவா்கள் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆம்பூா் ரெட்டித்தோப்பு பகுதியில் அரசு நிதியுதவி பெறும் மஜ்ஹருல் உலூம் கல்லூரி இயங்கி வருகின்றது. நிகழ் கல்வியாண்டிலி... மேலும் பார்க்க

பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு

மிட்டாளம் ஊராட்சி, குட்டகிந்தூா் தொடக்கப் பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறக்கப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியா் மணிவண்ணன் வரவேற்றாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஸ்... மேலும் பார்க்க

பல்கலைக்கழக தர வரிசைப் பட்டியலில் இஸ்லாமிய கல்லூரி மாணவிகள் சாதனை

திருவள்ளுவா் பல்கலைக் கழக தோ்வு முடிவுகளில் இஸ்லாமிய மகளிா் கலை மற்றும் அறிவியில் கல்லூரி மாணவிகள் 6 போ் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனா். திருவள்ளுவா் பல்கலைக்கழகம் 2022-2025 தோ்வு முடிவ... மேலும் பார்க்க