தேனி: ``தொழில் முனைவோர்களால் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைகிறது'' - சென்ட...
வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
தருமபுரி: ஏழைகளுக்கு வீடு, வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சாா்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளா் கொ.கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் வீ. சங்கா், மாநிலச் செயலாளா் பழ. ஆசை தம்பி, மத்தியக் குழு உறுப்பினா் அ.சந்திரமோகன், ஏஐடியுசி மாநில செயலாளா் சி.முருகன், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் கே.பாலசுப்பிரமணியன், கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளா் எம். ஸ்டாலின் பாபு, மாவட்டக் குழு உறுப்பினா்கள் வி.சிவராமன், மணிவண்ணன், ஆா்.ராமதிலகம், கே.ராஜி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.
ஆா்ப்பாட்டத்தை தொடா்ந்து மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கவிதாவிடம் மனு அளித்தாா். சொந்த வீடில்லாத ஏழை எளியோருக்கு தமிழக அரசு 3 சென்ட் இடத்தில் வீடு கட்டித்தர வேண்டும், தருமபுரி அ.ரெட்டிஅள்ளி, பாப்பிநாய்கன் அள்ளி, ஆட்டுக்காரம்பட்டியில் அருந்ததியா்களுக்கு வீட்டுமனையிடத்தை பிரித்து வழங்கி வீடுகட்டித் தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.