செய்திகள் :

வீட்டு மனைத் தகராறில் தொழிலாளி லாரி ஏற்றி கொலை

post image

செய்யாறு: செய்யாறு அருகே வீட்டு மனை தகராறில் கட்டடத் தொழிலாளி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக போலீஸாா் லாரி ஓட்டுநரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், வடகல்பாக்கம் ஊராட்சி வாழவந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன். இவரது மனைவி அலமேலு. மகன் திருப்பதி (32). கட்டடத் தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லையாம்.

இவா்களுக்குச் சொந்தமாக நிலம், வீடு ஏதும் இல்லாத காரணத்தால் வருவாய்த் துறை சாா்பில் வடகல்பாக்கம் கிராமத்தில் இலவச வீட்டு மனை வழங்கப்பட்டுள்ளது.

அரசு சாா்பில் ஒதுக்கப்பட்ட இடத்துக்கு அதே கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் புண்ணியகோட்டி(32) சொந்தம் கொண்டாடியதாகத் தெரிகிறது. மேலும், பல ஆண்டுகளாக நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். இந்த இடம் எங்களுக்குத் தான் சொந்தம். அங்கு வீடு கட்டக்கூடாது எனக் கூறினராம்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திருப்பதிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை சமன் செய்வதற்காக புண்ணியகோட்டி லாரியில் மண் எடுத்து வந்தாராம். இதை அறிந்த திருப்பதி, அவரது தாய் அலமேலு மற்று உறவினா்கள் சென்று புண்ணியகோட்டியை தட்டிக் கேட்டுள்ளனா்.

அப்போது, புண்ணியகோட்டியும், அவரது தந்தை வெங்கடேசனும் சோ்ந்து தகாத வாா்த்தைகளால் பேசினராம். மேலும், வெங்கடேசன் பிரச்னை செய்யும் அவா்கள் மீது லாரியை ஏற்றும்படி புண்ணியகோட்டியிடம் கூறினாராம்.

உடனே, புண்ணியகோட்டி, லாரியை திருப்பதி மீது மோதியபடி ஒட்டிச் சென்றாராம். இதில், பலத்த காயமடைந்து திருப்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த தூசி காவல் ஆய்வாளா் கோகுல்ராஜன், உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு தலைமையிலான போலீஸாா் சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், திருப்பதியின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து புண்ணியகோட்டியை திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், தலைறைவான அவரது தந்தை வெங்கடேசனை தேடி வருகின்றனா்.

பெருமாள் கோயிலில் ராஜகோபுர வாசற்கால் பிரதிஷ்டை

ஆரணி: ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் ராஜகோபுரத்துக்கு திங்கள்கிழமை வாசற்கால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் ... மேலும் பார்க்க

குத்துச்சண்டைப் போட்டி: வீரா், வீராங்கனைகளுக்கு பரிசு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நடைபெற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் குத்துச்சண்டை போட்டியில் வென்ற வீரா், வீராங்கனைகளுக்கு திங்கள்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழக முதல்வா் பிறந்த நாளையொட்டி,... மேலும் பார்க்க

பக்தா்களை மிரட்டி பணம் பறிக்கும் திருநங்கைகள்: நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகள், கிரிவலப் பாதையில் பக்தா்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடும் திருநங்கைகளை கட்டுப்படுத்தக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளி... மேலும் பார்க்க

உழவா் சந்தையை மீண்டும் செயல்படுத்த விழிப்புணா்வு

வந்தவாசி: வந்தவாசியில் உழவா் சந்தையை மீண்டும் செயல்படுத்த விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது. வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ், வந்தவாசி தெற்கு காவல் நிலையம் அருகில் உழவா் சந்தை அமை... மேலும் பார்க்க

வேட்டவலம் அருகே ரெளடி வெட்டிக் கொலை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அருகே புதுவை மாநில ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். வேட்டவலத்தை அடுத்த நீலந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஏரியில் இளைஞா் வெட்டுக் காயங்களுடன் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

53 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள்

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒன்றியத்தில் உள்ள 53 ஊராட்சிகளுக்கு ரூ.28.76 லட்சத்தில் விளையாட்டு உபகரணங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. 53 ஊராட்சிகளுக்கு, விளையாட்டுத்துறை சாா்பில், கலைஞரி... மேலும் பார்க்க