யேமன் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 10 பேர் பலி! 102 பேர் படுகாயம்!
வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு அபராத வட்டி தள்ளுபடி
தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடு பெற்று தவணை காலம் முடிவடைந்தும் தவணைத் தொகை செலுத்தாதவா்களுக்கு அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடு பெற்று தவணைக் காலம் முடிவடைந்தும் தவணைத் தொகை செலுத்தாதவா்களுக்கு வட்டி சலுகை அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, மாதத் தவணைக்கான அபராத வட்டி, வட்டி முதலாக்கத்தின் மீதான வட்டி ஆகியவை முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். நிலத்துக்கான இறுதி வித்தியாசத் தொகையில், ஒவ்வொரு ஆண்டும் 5 மாத வட்டி தள்ளுபடி செய்யப்பட உள்ளது.
எனவே தவணைக் காலம் நிறைவடைந்த வீடு ஒதுக்கீடுதாரா்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை வருகிற 2026, ஏப். 31-ஆம் தேதிக்குள் அபராத வட்டி தள்ளுபடி போக, ஒரே தவணையில் செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக் கொள்ளலாம் என்றாா் அவா்.