பஞ்சாபில் அடுத்த 3 நாள்களுக்கு அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடல்!
வீரராகவ பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டம்!
திருவள்ளூர்: திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள்கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்ற தேரோட்ட நிகழ்வில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருவள்ளூர் ஶ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் திருக்கோயில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து
வரும் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவில் 60 அடி உயரம், 21 அடி அகலம் கொண்ட திருத்தேர் வண்ண மலர்கள், வண்ண துணி மற்றும் வாழை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு காலை 5.30 மணியளவில், தங்க, வைர ஆபரணங்கள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் சமேதராய் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார்.
அதைத் தொடர்ந்து காலை 7.30 மணியளவில் திருத்தேர் தேரடியிலிருந்து பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் திருத்தேர் புறப்பாடு நடைபெற்றது. இத்தேர் குளக்கரை வீதி, வடக்கு ராஜவீதி, பஜார் வீதி, மோதிலால் தெரு என நான்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்து 9.30 மணியளவில் மீண்டும் தேரடியில் நிலை நிறுத்தப்பட்டது.
அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

இதில் சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், பூந்தமல்லி, திருத்தணி, ஊத்துக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர், , செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று திருத்தேர் சக்கரத்தில் உப்பு, மிளகு போட்டு, ‘கோவிந்தா... கோவிந்தா என்று பக்தி முழக்கமிட்டு தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மோர், குளிர் பானங்கள், அன்னதானம் ஆகியவற்றை வழங்கினர்.
விழா பாதுகாப்புப் பணியில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி, காவல் ஆய்வாளர்கள் அந்தோணி ஸ்டாலின், வெற்றிச்செல்வன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.