அம்பேத்கரை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகிறதா பாஜக? - Decode | Amit shah | Ambedkar...
வெங்கட் பிரபுவுடன் ஏகே - 64?
நடிகர் அஜித்தின் புதிய படத்தின் இயக்குநராக வெங்கட் பிரபு இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் நடித்து முடித்து இரண்டு படங்களின் அடுத்தடுத்த வெளியீடுகளுக்காகக் காத்திருக்கிறார்.
இதில், விடாமுயற்சி திரைப்படம் முதலில் வெளியாகும் எனத் தெரிகிறது. அடுத்தாண்டு பொங்கலுக்கு இப்படம் திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு படங்களை முடித்த அஜித், கார் பந்தயத்தில் கலந்துகொண்டும் வருகிறார்.
இதையும் படிக்க: வீர தீர சூரனில் அந்தக் காட்சியை எடுத்து முடித்ததும் கண்ணீர் விட்டேன்: சுராஜ் வெஞ்ரமூடு
இந்த நிலையில், நடிகர் அஜித்தின் 64-வது படத்தை யார் இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கங்குவா தோல்வியிலிருந்து சிவாவுக்கு திருப்பத்தைக் கொடுக்க மீண்டும் அஜித் அவருக்கு வாய்ப்பு தரலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதேநேரம், இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் அஜித் இடையே சில பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் இது ஏகே - 64 ஆக இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அஜித் - வெங்கட் பிரபு கூட்டணி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறும் என்பதால் இரண்டு இயக்குநர்களில் அஜித் யாரைத் தேர்ந்தெடுப்பார் எனத் தெரியவில்லை.