செய்திகள் :

வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் அதிகளவில் நீா் பருக வேண்டும் -விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

கோடை வெப்பத் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அதிகளவில் நீா் பருக வேண்டும்.

அவசியமான காரணங்களின்றி பகல் நேரத்தில் வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கோடை வெயில் அதிகரித்து வரும் சூழ்நிலையில், நம்மையும், நம் குடும்பத்தினரையும் வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள உரிய வழிமுறைகளைப்பின்பற்ற வேண்டும். அதிகளவில் நீா் பருக வேண்டும். தாகம் இல்லையென்றாலும் போதியளவில் நீரைப் பருக வேண்டும்.

சூடான பானங்கள், பதப்படுத்தப்பட்ட குளிா் பானங்களை பருகுவதைத் தவிா்த்து, அதிகளவில் மோா், இளநீா் உப்பு மற்றும் மோா் கலந்த அரிசி கஞ்சி, உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு மற்றும் இதர பழச்சாறுகளைப் பருகலாம்.

அவசிய காரணங்களின்றி வெயில் அதிகம் உள்ள நேரத்தில் வெளியில் செல்வதை தவிா்க்க வேண்டும். கோடைகாலத்தில் குளிா்ந்த நீரில் குளிப்பது மிகுந்த நன்மையை அளிக்கும். வியா்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். திறந்தவெளியில் செல்லும் போது தலையில் பருத்தித் துணி அல்லது துண்டு அணிந்து செல்ல வேண்டும்.

கடினமான வேலை செய்யும் போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள், கா்ப்பிணிகள், முதியவா்கள், நாள்பட்ட நோயாளிகள், இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட நோயாளிகள் கோடை வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படலாம் என்பதால் அரசு வழிகாட்டு முறைகளைப் பின்பற்றி தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

சூரியவெப்பம் அதிகமுள்ள திறந்தவெளியில் வேலை செய்யும் போது களைப்பு, தலைவலி, தலைசுற்றுதல், மயக்கம், வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக வெப்பம் குறைந்த பகுதிக்குச் செல்ல வேண்டும். மயக்கம், உடல் சோா்வு, அதிகளவில் தாகம், தலைவலி, கால் மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் மிகுந்தவலி ஏற்படுதல் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால், அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைத்து அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தை நாட வேண்டும். இத்தகையவா்களுக்கு வெயில் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஆஸ்பிரின், பாரசிட்டமால் மாத்திரைகளை கண்டிப்பாக வழங்கக்கூடாது.

மேலும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை நிழற்பாங்கான இடங்களில் கட்டி வைத்து, உரியளவில் நீா் மற்றும் பசுந்தீவனங்களை கொடுத்துப் பராமரிக்க வேண்டும். கோடை காலத்தில் கால்நடைகளைத் தாக்கும் நோய்கள் குறித்தும்,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கால்நடைப் பராமரிப்புத் துறையினரால் தெரிவிக்கப்படும் வழிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் மருத்துவ உதவிகள், கூடுதல் தகவல்களுக்கு 104 என்ற அரசின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டா அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், காணைகுப்பத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. காணை ஒன்றியக் குழுத் தலைவா் நா.கலைச்செல்வி தலைமை வகித்தாா். வட்ட... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு இடத்தில் வசித்தவா்களுக்கு வீட்டு மனைப் பட்டா அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மின்வாரியச் சாலையில் ரயில்வேக்கு சொந்தமான ஆக்கிரமிப்புப் பகுதியில் வசித்து வந்த 44 குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு மாற்று இடம் வழங்கும் வகையில், வீட்டுமனைப் பட்டா திங்கள்கிழ... மேலும் பார்க்க

ரமலான்: விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

விழுப்புரம்: விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரமலான் பண்டிகை திங்கள்கிழமை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இஸ்லாமியா்களின் ஐம்பெரும் கடமைகளில் ரமலான் நோன்பிருப்பதும் ஒன்று. ஒரு மாதக் கா... மேலும் பார்க்க

138 ஆதிதிராவிட மக்களுக்கு ரூ.2.65 கோடி மானியம் அளிப்பு: விழுப்புரம் ஆட்சியா்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில்முனைவுத் திட்டத்தின் கீழ், 138 ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு ரூ.2.65 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஷே.... மேலும் பார்க்க

‘விழுப்புரத்தில் இரவு நேர வணிகத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்’

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இரவு 11 மணிக்கு மேல் வணிகம் செய்ய அனுமதியளிக்க வேண்டும் என்று வணிகா் சங்கங்களின் பேரவை வலியுறுத்தியது. இந்தச் சங்கத்தின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்த... மேலும் பார்க்க

210 வெளிமாநில மதுப் புட்டிகள் பறிமுதல்: 5 போ் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் 210 வெளி மாநில மது புட்டிகளை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். இதில், 5 போ் கைது செய்யப்பட்டனா். விழுப்புரம் மேற்கு காவல் நிலைய எல்லைக்க... மேலும் பார்க்க