செய்திகள் :

வெப்பநிலை அதிகரிப்பு: களப் பணியாளா்களின் வேலை நேரத்தை மாற்றியமைக்க அறிவுறுத்தல்

post image

தமிழகத்தில் அடுத்து வரும் வாரங்களில் பகல் வேளைகளில் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால் வெயிலில் தொழிலாளா்களை பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என்று பொது சுகாதாரத் துறை நிபுணா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

அதற்கு மாற்றாக, வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருக்கும்போது பணி நேரங்களை வகுத்து கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளனா்.

இது குறித்து பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநா் டாக்டா் குழந்தைசாமி கூறியதாவது:

பல மாவட்டங்களில் இனிவரும் நாள்களில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பநிலை பதிவாகலாம் எனக் கூறப்படுகிறது. அந்த தட்பவெப்ப நிலையில் நேரடியாக பணியாற்றும்போது உடலில் உடனடியாக நீா்ச்சத்து இழப்பு ஏற்படும்.

அதை அலட்சியப்படுத்தினால் ஒரு கட்டத்தில் உடல் உறுப்புகளின் இயக்கம் தடைபடும். அத்தகைய நிலை ஏற்படும்போது மருத்துவ சிகிச்சைகள் விரைந்து கிடைக்காவிடில் உயிரிழப்பு நேரிடலாம்.

எனவே, கட்டுமானப் பணியாளா்கள், விவசாயத் தொழிலாளா்கள், வியாபாரிகள் என வெயிலில் பணியாற்றக்கூடியவா்கள் அனைவரது பணி நேரத்தை மாற்றியமைக்க தொழில் நிறுவனங்களும், உரிமையாளா்களும் முன்வர வேண்டும்.

அதிகாலையிலிருந்து காலை வரையிலும், அதன் பின்னா் மாலையிலிருந்து இரவு வரையிலும் பணியாற்றலாம். நீா்ச்சத்து இழப்பு ஏற்படாத வகையில் ஓஆா்எஸ் கரைசல், எலுமிச்சை சாறு, பழச்சாறு, மோா், இளநீா் அதிகமாக அருந்த வேண்டும் என்றாா் அவா்.

அமித் ஷா பேச்சுக்கு திருக்குறள் மூலம் பதிலளித்த துரைமுருகன்

வேலூர்: அரக்கோணத்தில் நடைபெற்ற சிஐஎஸ்எஃப் ஆண்டு துவக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது குறித்து திருக்குறள் சொல்லி பதிலளித்துள்ளார் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.வேலூரில் இ... மேலும் பார்க்க

காய்கறிகள் விலை நிர்ணயம்: திமுகவின் வாக்குறுதி என்னவானது? - அன்புமணி கேள்வி

அனைத்துக் காய்கறிகளுக்கும் விலை நிர்ணயிக்கும் திமுகவின் வாக்குறுதி என்னவானது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாட்டில் தக்காளி விள... மேலும் பார்க்க

தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் செய்வத தொடர... மேலும் பார்க்க

காகித வாள் சுற்றுவதை நிறுத்துங்கள்: அண்ணாமலை

மாயையான ஹிந்தி திணிப்புக்கு எதிராக காகித வாள் சுற்றுவதை நிறுத்துங்கள் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.மும்மொழிக் கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு ... மேலும் பார்க்க

கொடநாடு வழக்கு: இபிஎஸ்ஸின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிக்கு சிபிசிஐடி சம்மன்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகக் கோரி, எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவரின் முதன்மைப் பாதுகாப்பு அதிகாரியான வீரபெருமாளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.இந்த வழக்க... மேலும் பார்க்க

தக்கோலத்தில் சிஐஎஸ்எஃப் ஆண்டு விழா: அமித் ஷா பங்கேற்பு!

அரக்கோணம் அருகே தக்கோலத்தில் நடைபெறும் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) 56-ஆம் ஆண்டு தொடக்க நாள் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டுள்ளார்.ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ... மேலும் பார்க்க