Doctor Vikatan: சித்த மருந்துகள் எடுத்துக்கொள்வோருக்கு உடல் எடை கூடும் என்பது உண...
வெம்பக்கோட்டை அகழாய்வில் உருண்டை வடிவ மெருகேற்றும் கல்
வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வின் போது, உருண்டை வடிவிலான மெருகேற்றும் கல் புதன்கிழமை கண்டறியப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குள்பட்ட மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
3- ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், செப்புக் காசுகள், சுடுமண் உருவப் பொம்மை, சதுரங்க ஆட்டக்காய்கள், கண்ணாடி மணிகள், வட்டச் சில்லுகள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 3,400-க்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் கண்டறியப்பட்டன.
இந்த நிலையில், புதன்கிழமை நடைபெற்ற அகழாய்வின் போது, உருண்டை வடிவிலான மெருகேற்றும் கல் கண்டறியப்பட்டது.
இதன்மூலம், கலைநயமிக்க சங்கு வளையல் உள்ளிட்ட அணிகலன்கள், அலங்காரப் பொருள்களை மெருகேற்றுவதற்கு இந்தக் கல் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.