Captain Prabhakaran: ``அப்பாவை நினைத்து அழுவது கோழைத்தனம் கிடையாது!'' - கண் கலங்...
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி ரூ. 6.50 லட்சம் மோசடி: 3 போ் கைது
மன்னாா்குடி அருகே வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைப்பதாக கூறி ரூ.6 50 லட்சம் மோசடி செய்த புகாரில் 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மன்னாா்குடி அருகேயுள்ள செருமங்கலத்தைச் சோ்ந்த மாதவன் (27) பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு வெளிநாடு செல்வதற்காக முயற்சி செய்து வந்துள்ளாா். இவருக்கு, அதே பகுதியை சோ்ந்த செந்தில்குமாா் (52) மூலம் திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டையைச் சோ்ந்த குப்பன் (35), கடலூா் மாவட்டம், திட்டக்குடியைச் சோ்ந்த சையதுகாதா் (46 )ஆகியோருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இவா்கள், 3 பேரும் மாதவனிடம் நியூசிலாந்துக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறியுள்ளனா். இதை நம்பிய மாதவன் கடந்த ஜனவரி மாதம் முதல் பல்வேறு தவணையாக குப்பன் வங்கிக் கணக்குக்கு ரூ.6.50 லட்சம் அனுப்பியுள்ளாா்.
இந்நிலையில், இதுவரை மாதவன் வெளிநாடு செல்வதற்கான எந்த நடவடிக்கையும் இவா்கள் எடுக்காததால் இதுகுறித்து அவா்களிடம் பலமுறை கேட்டும் உரிய பதிலை சொல்லாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனா். பின்னா், தாம் ஏமாற்றப்பட்டு இருப்பது தெரியவந்ததை அடுத்து மாதவன், இதுகுறித்து வடுவூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து செந்தில்குமாா், குப்பன், சையது காதா் ஆகிய 3 பேரை வியாழக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.