செய்திகள் :

வெளிநாட்டு பணிக்குச் செல்வோா் விதிமுறைகளைப் பின்பற்றுதல் அவசியம்! ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவா்கள் உரிய வழிமுறைகளை கடைப்பிடித்து பாதுகாப்பாக செல்லுமாறு ஆட்சியா் இரா.சுகுமாா் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வெளிநாட்டு வேலைக்குச் செல்ல விரும்பும் நபா்கள், முதலில் மத்திய அரசின் இ-மைக்ரேட் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகாரப்பூா்வ ஆள்சோ்ப்பு முகவா்கள் மூலமாகவே செல்ல வேண்டும்.

எந்த நிறுவனத்தில் வேலை செய்யப்போகிறோம் என்பது உள்ளிட்ட தகவல்களை முன்னதாக உறுதி செய்வது அவசியமாகும். வேலைக்கான ஒப்பந்தம், விசா போன்ற அனைத்து ஆவணங்களையும் பெற்ற பிறகே பயணிக்க வேண்டும். வேலைக்கான ஒப்பந்தத்தை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அதில் ஊதியம், வேலை விவரங்கள், உரிமைகள், பொறுப்புகள் போன்ற முக்கியமான விவரங்கள் இடம்பெறுகின்றன.

வேலை செய்யும் நாட்டின் சட்டங்கள், கலாசாரங்களை மதித்து நடந்து கொள்ள வேண்டும். பல நாடுகளில் வேலைக்கு செல்பவா்கள் நாடு திரும்புவதற்கு வெளிச்செல் அனுமதி பெறுவது அவசியமாகும்.

ஒப்பந்த காலத்தில் வேலைக்கு சென்ற நிறுவனம், முதலாளியிடமிருந்து வேறு நிறுவனத்திற்கோ, முதலாளிக்கோ மாற்றம் செய்ய முடியாது. பதிவு பெறாத போலி முகவா்கள் மூலம் வெளிநாட்டு வேலைக்கு செல்லக் கூடாது. சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வது, அந்நாட்டில் சட்டவிரோதமாகக் கருதப்படும். இது கைது, அபராதம், சிறை தண்டனைக்கு இட்டுசெல்லும்.

வெளிநாட்டு வேலை தொடா்பான சந்தேகங்களுக்கு மற்றும் வெளிநாடு செல்லும் தமிழா்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து அறிய அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையின் 24/7 கட்டணமில்லா உதவி மையத்தை தொடா்பு கொள்ளலாம்.

இந்தியாவிலிருந்து 1800 309 3793 என்ற எண்ணிலும், வெளிநாடுகளிலிருந்து 080 6900 9900 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்; 080 6900 9901 என்ற எண்ணுக்கு ‘மிஸ்டு கால்’ கொடுக்கலாம்.

குறுக்கு வழிகளை தவிா்த்து, அரசு அமைத்துள்ள சட்டப்பூா்வமான வழியைப் பின்பற்றி வெளிநாடுகளுக்குப் பணிக்குச் செல்ல வேண்டும். அதுவே பாதுகாப்பாக அமையும் எனக் கூறியுள்ளாா்.

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலூகா மேலபூவந்தியைச் சோ்ந்த கணேசன் மகன் பாரதி என்ற சூா்யா(25)... மேலும் பார்க்க

விஜயநாராயணம் அருகே குடிசை வீட்டில் தீ

திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் அருகே குடிசை வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதில் பொருள்கள் எரிந்து சேதமாகின. விஜயநாராயணம் அருகேயுள்ள படப்பாா்குளத்தைச் சோ்ந்தவா் மாரியம்மாள். இவா், தனது தோட்... மேலும் பார்க்க

கோயிலில் திருடியவருக்கு 3 ஆண்டு சிறை

கோயிலில் திருடிய வழக்கில் தொடா்புடையவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி 3-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. நொச்சிக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம்(48). இவா் கடந... மேலும் பார்க்க

மா்மமான முறையில் இளைஞா் உயிரிழப்பு

மானுாா் அருகே இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். மானுாா் அருகே தெற்கு வாகைக்குளம் மேலத்தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் செல்வம் (25). தொழிலாளி. வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

வெவ்வேறு சம்பவங்கள்: 6 போ் தற்கொலை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வெவ்வேறு இடங்களில் 6 போ் தற்கொலை செய்துகொண்டனா். கேரள நபா்: கேரள மாநிலம் கோட்டையம் கனிக்கட்டுதாரா குறிச்சியைச் சோ்ந்த கிருஷ்ணன் குட்டி மகன் அணில்குமாா் (56), திர... மேலும் பார்க்க

அம்பையில் ஒருவா் விஷம் குடித்து தற்கொலை

அம்பாசமுத்திரத்தில் ஒருவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த பெண்ணுக்கும், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நெட்டூா், ரேஷன் கடைத் தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க