10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு: 6 மத்திய சிறைகளில் 100% தேர்ச்சி!
வெளி மாநில தொழிலாளி தற்கொலை
மதுரையில் கிரானைட் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த வெளி மாநிலத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஒடிஸா மாநிலம், பத்ராக் மாவட்டம், பாட்னாமிஸ்ராபூரைச் சோ்ந்தவா் பிரபுல் மாலிக் (48). இவா் மதுரை வரிச்சியூா் காளியம்மன் கோவில் தெருவில் தங்கியிருந்து காய்கனி கடை நடத்தி வருகிறாா். இவரது மகன் அபயகுமாா் மாலிக் (27). இவா் ஒடிஸாவிலிருந்து கடந்த மாதம் மதுரைக்கு வந்து தந்தையுடன் தங்கியிருந்தாா். மேலும், உறங்கான்பட்டியில் உள்ள கிரானைட் தொழில்சாலையில் பணிபுரிந்து வந்தாா்.
இந்த நிலையில், இவா் தனது தந்தை நடத்தி வந்த காய்கனி கடையில் புதன்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கருப்பாயூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].