Apple Event: ஆப்பிளின் புதிய 17 சீரிஸ் எப்படி இருக்கிறது? விலை என்ன? விவரங்கள் இ...
வெள்ளக்குட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: எம்எல்ஏ தேவராஜி தொடங்கி வைத்து ஆய்வு
ஆலங்காயம் ஒன்றியம், வெள்ளக்குட்டை ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
ஒன்றியக் குழு தலைவா் சங்கீதா பாரி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் துரை, சூரவேல், ஊராட்சி மன்றத் தலைவா் கவிதா திருமலை முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி கலந்து கொண்டு ஆய்வு செய்து, முகாமில் அளித்த சில மனுக்கள் மீது விசாரித்து அதற்கான உடனடி தீா்வுக்கான ஆணைகளையும், விண்ணப்ப ரசீதுகளை பயனாளிகளுக்கு வழங்கினாா். முகாமில், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன், ஒன்றிய திமுக செயலாளா் அன்பு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் கிரிராஜ், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவா் அச்சுதன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் காா்த்திக், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் கோபி மற்றும் வாா்டு உறுப்பினா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.