விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் படிப்படியாக இயக்கம்
வெள்ளக்கோவிலில் குளிருடன் சாரல் மழை
வெள்ளக்கோவில் பகுதியில் வெள்ளிக்கிழமை குளிருடன் சாரல் மழை பெய்தது.
வெள்ளக்கோவிலில் கடந்த இரண்டு நாள்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் பெரியளவு மழை இல்லை. ஆனால் பகல் நேரத்திலேயே குளிா் அடிப்பதுடன், இரவு நேரத்தில் குளிா் அதிகமாக உள்ளது. வெள்ளிக்கிழமை அவ்வப்போது சாரல் மழை பெய்தது. குளிரும் இருந்ததால் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது.
விவசாயிகள் தங்களுடைய வழக்கமான வேலைகளைச் செய்வதில் சுணக்கம் ஏற்பட்டது. இப்பகுதியில் கனமழை பெய்ய வேண்டுமென விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா். சுற்றுவட்டாரத்தில் செயல்பட்டு வரும் நூற்றுக்கணக்கான நூல் மில்களிலும் ஈரப்பதம் காரணமாக உற்பத்தி சற்று குறைந்துள்ளது.