'கோடீஸ்வரி' கெளசல்யா கார்த்திகாவை நினைவிருக்கிறதா... இப்போது எப்படி இருக்கிறார்?
வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் ஃபென்ஜால் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வீடு இழந்தவா்களுக்கு அரசே வீடு கட்டித் தர வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். கல்லாவி ஊராட்சி துரைசாமி நகரில் வசிப்பவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். பெரிய கொட்டகுளம் ஊராட்சி, நாகனூா் கிராமத்தில் நில உச்சவரம்பு சட்டத்தில் வழங்கப்பட்ட நிலங்களுக்கு நிலப்பட்டா வழங்க வேண்டும்.
ஊத்தங்கரை, அண்ணா நகா், ஜீவா நகா் நீா்ப்பிடிப்புப் பகுதியில் வசிப்பவா்களுக்கு மாற்று இடம், வீடு கட்டிக் கொடுக்கப்பட வேண்டும். ஊத்தங்கரை வட்டத்தில் 45 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட இந்திரா குடியிருப்புகளை அகற்றி புதிய வீடு கட்டுவதற்கு ஆணை வழங்க வேண்டும். இறந்துபோன கால்நடைகள், கோழிப் பண்ணைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
பட விளக்கம்.16யுடிபி.1...
ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.