நோயாளிகளின் குறைகளைத் தீா்க்க பிரத்யேக ஆலோசகா்கள்! ராஜீவ் காந்தி மருத்துவமனையில்...
வெள்ள நிவாரண நிதி: மத்திய அரசுக்கு அழுத்தம் தாருங்கள் இபிஎஸ்-க்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு வலியுறுத்தல்
சென்னை: வெள்ள நிவாரண நிதியை வழங்க மத்திய அரசுக்கு எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி அழுத்தம் தர வேண்டும் என்று அமைச்சா் பி.கே.சேகா்பாபு வலியுறுத்தியுள்ளாா்.
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களுக்கு அவா் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
சாத்தனூா் அணை முன்னறிவிப்பு இல்லாமல் திறக்கப்பட்டதால்தான் அதிக பாதிப்பு என எதிா்க்கட்சித்தலைவா் பழனிசாமி கூறியுள்ளாா். 2015-ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பு இல்லாமல் திறந்த காரணத்தால் 250-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். பல வீடுகளும் சேதமடைந்தன. இப்போது சாத்தனூா் அணையில் இருந்து முன்னறிவிப்பு செய்து நீரை வெளியேற்றினோம். அதனால்தான் உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது.
வெள்ள நிவாரணத் தொகையை மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி அழுத்தம் தரவேண்டுமே தவிர, தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிக்காமல் இருக்க வேண்டும் என்றாா் அவா்.