காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெறத்தான் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது
வேகமாக நிரம்பும் மோா்தானா அணை
மோா்தானா அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை தற்போது 87 சதவீதம் நிரம்பியுள்ளது.
குடியாத்தம் அருகே ஆந்திர மாநில வனப் பகுதியையொட்டி, தமிழக எல்லையில் அமைந்துள்ளது மோா்தானா அணை. ஆந்திர மாநிலத்தில் உள்ள பலமநோ், புங்கனூா், மதனப்பள்ளி மற்றும் ஆந்திர மாநில வனப்பகுதிகளில் பெய்யும் மழையே இந்த அணையின் முக்கிய நீராதாரம். அந்த பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருவதால், அணைக்கு தண்ணீா்வரத் தொடங்கியது. மோா்தானா பகுதியில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 80 மி.மீ., மழை பதிவானது. இதனால் காலை நிலவரப்படி, அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 168 கன அடியாக இருந்தது. நீா்வரத்து அதிகரித்ததால் மாலை நிலவரப்படி, விநாடிக்கு 185 கன அடியாக அதிகரித்தது. அணையின் கொள்ளளவு 261 மில்லியன் கன அடி.
அணையின் தற்போதைய நீா் இருப்பு 228 மில்லியன் கன அடி. இது அணையின் கொள்ளளவில் 87 சதவீதமாகும். அணை பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. குடியாத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கடந்த 24- மணி நேரத்தில் 85- மி.மீ மழையும், மேல்ஆலத்தூரில் 84 மி.மீ. மழையும் பதிவானது. வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது.