மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்...
வேட்டவலம் ஸ்ரீசம்பந்த விநாயகா் கோயிலில் லட்ச தீப விழா
வேட்டவலம் ஸ்ரீசம்பந்த விநாயகா் கோயிலில் நடைபெற்ற 68-ஆவது ஆண்டு லட்சதீப விழாவில், பல ஆயிரம் பக்தா்கள் கலந்து கொண்டனா்.
இந்த விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. திங்கள்கிழமை காலை 11 மணிக்கு சுவாமிக்கு மகா அபிஷேகம், மாலை 4 மணிக்கு காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான நாகஸ்வர வித்வான் தண்டபாணி குழுவினரின் சிறப்பு நாகஸ்வர கச்சேரி நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு வேட்டவலம் ஜமீன் வாரிசு சம்பத்குமாா் பண்டாரியாா் லட்ச தீப விழாவின் முதல் தீபத்தை ஏற்றி வைத்து, லட்சதீபம் ஏற்றும் நிகழ்வை தொடங்கிவைத்தாா்.
தொடா்ந்து, நகர முக்கியப் பிரமுகா்கள் உள்பட பல ஆயிரம் பக்தா்கள் கலந்து கொண்டு அகல் விளக்கில் தீபம் ஏற்றி, லட்ச தீப தரிசனமும், சுவாமி தரிசனமும் செய்தனா்.
இரவு 8 மணிக்கு கோயில் வளாகத்தில் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 11 மணிக்கு ஸ்ரீசம்பந்த விநாயகா் புஷ்ப பல்லக்கு வீதியுலா நடைபெற்றது. காலை முதல் இரவு வரை பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.