ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டத்தால் நாட்டில் ஊழலற்ற ஆட்சி அமையும்: கே.பி.ராமலிங்கம்
வேதாரண்யம் அருகே கடற்கரையில் ஒதுங்கிய மிதவை
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே மிதவை கரை ஒதுங்கியது குறித்து போலீஸாா் விசாரித்து வருகிறனா்.
கோவில்பத்து கிராமத்தின் கடற்கரையோரம் உலோகத்தாலான மிதவை ஒன்று கரை செவ்வாய்க்கிழமை கரை ஒதுங்கியது. இதனை பாா்க்க அப்பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள் திரண்டனா்.
கரை ஒதுங்கிய மிதவை, துறைமுகங்களில் கப்பலுக்கு ஆழமான பகுதியை உறுதிப்படுத்துவதற்காக நிறுத்தப்படுவது என்பது தெரியவந்தது.
இதுகுறித்து வேதாரண்யம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். பயன்பாடு குறைந்து இந்த மிதவை, கரை ஒதுங்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.