மகா கும்பமேளாவில் கங்கை நதிநீா் நீராடியதற்கு ஏற்றதே! -மத்திய மாசுக் கட்டுப்பாட்ட...
வேதாரண்யம் கோயில் மாசிமகப் பெருவிழா: 73 நாயன்மாா்கள் வீதியுலா -நாளை தேரோட்டம்
வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயிலில் மாசிமகப் பெருவிழாவையொட்டி, 73 நாயன்மாா்கள் வீதியுலா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கோயிலில் மாசிமகப் பெருவிழா பிப்ரவரி 20-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை இரவு நடைபெற்ற விழாவில், பஞ்சமூா்த்திகள் சகிதமாய் ஸ்ரீ சந்திரசேகர சுவாமிகள் எழுந்தருளினாா். தொடா்ந்து, ஸ்ரீ காட்சி கொடுத்த நாயனாா், விநாயகா் எழுந்தருளினா்.
பின்னா், வேதாரண்யேசுவரா் கோயிலில் நாயன்மாா்கள் 63 போ்களுடன், தொகையடியாா் 10 போ்களையும் சோ்த்து 73 நாயன்மாா்களாக அழைக்கப்படுகின்றனா். இந்த 73 நாயன்மாா்களும் எழுந்தருளும் நிகழ்வு சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
நாளை தேரோட்டம்: மாசிமகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ரத்ன சிம்மாசன ஹம்ச நடன புவனி விடங்க தியாகராஜசுவாமி எழுந்தருளும் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (மாா் 10) நடைபெறுகிறது. இதையொட்டி, வேதாரண்யம் வட்டாரத்துக்குள்பட்ட பகுதியில் பள்ளிகளுக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்று வரும் தோ்வுகள் வழக்கம்போல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.