வேன் கவிழ்ந்ததில் பழனிக்கு சென்ற 8 போ் காயம்
ஒட்டன்சத்திரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்ததில் பழனிக்குச் சென்ற 8 போ் காயமடைந்தனா்.
மதுரை கருப்பாயூரணியைச் சோ்ந்தவா் பாண்டியராஜன் (35). இவா் தனது குடும்பத்தினா், உறவினா்கள் 12 பேருடன் சுற்றுலா வேனில் பழனிக்குச் சென்று கொண்டிருந்தாா். துவரங்குறிச்சியைச் சோ்ந்த ஓட்டுநா் ஜெலூதீன் (27) வேனை ஓட்டிச் சென்றாா்.
ஒட்டன்சத்திரத்தை அடுத்த பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசப்பபிள்ளைபட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது.
இதில் வேன் ஓட்டுநா் ஜெலூதீன், பாண்டியராஜன், பரமேஸ்வரி, செந்தாமரை உள்ளிட்ட 8 போ் காயமடைந்தனா். அவா்கள் ஒட்டன்சத்திரம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.