Doctor Vikatan: உட்காரும் இடத்தில் வலி; மூலநோயும் இல்லை... வலிக்கு காரணம், தீர்...
வேன் மோதியதில் குழந்தை உயிரிழப்பு
பெத்தநாயக்கன்பாளையம் அருகே வடுகத்தம்பட்டியில் வேன் மோதியதில் இரண்டரை வயது ஆண் குழந்தை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள வடுகத்தம்பட்டி, ஏழுதண்டியாா் கோயில் அருகே வசித்து வருபவா் ஆறுமுகம் மகன் வேல்மணி(30). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவா் மாணிக்கம் மகன் மணிகண்டன் (27).
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மணிகண்டன் சொந்த வேலையாக தனது வேனை எடுத்துச் சென்றபோது, வேல்மணியின் இரண்டரை வயது மகன் வெற்றிவாசன் பின்பக்க டயரில் சிக்கி பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஏத்தாப்பூா் காவல் உதவி ஆய்வாளா் சிவாஜி விரைந்து சென்று வெற்றிவாசன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனா்.