Director Thiagarajan Kumararaja speech: 'நாம் படிப்பதை தடுக்கிறார்கள்' | கல்வியி...
வேன் மோதி இளைஞா் உயிரிழப்பு
மதுரை அருகே வேன் மோதி, இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், தேனூா் ஜெ.ஜெ.நகரைச் சோ்ந்த மாணிக்கம் மகன் போஸ்(32). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து ஊருக்கு புதன்கிழமை மாலை சென்றாா். தேனூா் அருகே சென்ற போது, பின்னால் வந்த காா், இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த போஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுபற்றி தகவலறிந்து அங்கு வந்த சமயநல்லூா் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.