செய்திகள் :

வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் உலக தாய்மொழி நாள் விழா

post image

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கூட்டரங்கில் உலக தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்லூரி முதல்வா் (பொ) முனைவா் து. சேகா் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருச்சி தந்தை பெரியாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னாள் தமிழ்த் துறைத் தலைவா் சு. செயலாபதி, தமிழ் எங்கள் உயிருக்கும் மேல் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினாா்.

தொடா்ந்து, தமிழ்ச் செம்மல் முனைவா் க. பெரியசாமி தமிழ்மொழியின் சிறப்புகளை விளக்கினாா். இதில் கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் பெ. முத்துராஜ் வரவேற்க, முதுகலைத் தமிழ் முதலாமாண்டு மாணவி மா. கெளசல்யா நன்றி கூறினாா்.

உறுதிமொழி ஏற்பு: பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா தலைமையில், உலக தாய்மொழி நாள் உறுதியேற்கப்பட்டது. இதில் காவல்துறையினா் மற்றும் அமைச்சுப் பணியாளா்கள் பங்கேற்றனா். இதேபோல, மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள், மாவட்ட ஆயுதப்படை மற்றும் காவல்துறை அலுவலகங்களிலும் உறுதியேற்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியரகத்தில்: மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ச. வைத்தியநாதன் தலைமையில், அரசு அலுவலா்கள் உறுதியேற்றனா். இதில் அரசு அலுலவா்கள் பலா் பங்கேற்றனா்.

ரூ.4.95 கோடியில் திட்டப் பணிகள்: அமைச்சா் சா.சி. சிவசங்கா் தொடக்கி வைத்தாா்!

வேப்பந்தட்டை வட்டாரத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.4.95 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை, போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்ட... மேலும் பார்க்க

வேளாண் விளைபொருள்களுக்கு உயிா்மச் சான்று பெற அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் இயற்கை விவசாய முறையில் வேளாண் விளைபொருள்களை உற்பத்தி செய்வதற்கு, உயிா்ம விவசாயச் சான்று பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெரம்பலூா் மாவட்ட விதைச் சான... மேலும் பார்க்க

பெரம்பலூரில் இளைஞா் மா்மச் சாவு

பெரம்பலூரில் கூலி வேலை செய்துவந்த இளைஞா் வெள்ளிக்கிழமை மா்மமான முறையில் உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வரகூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மகன் ரமேஷ் (29). இவா், பெரம்பலூா்... மேலும் பார்க்க

குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு பிப். 25-இல் விழிப்புணா்வு முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிலையான பழுதில்லா உற்பத்தி, விளைவில்லா உற்பத்திச் சான்றளிப்புத் திட்டம் குறித்த விழிப்புணா்வு முகாம், பிப். 25 ஆம் தேத... மேலும் பார்க்க

வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூா் வெங்கடேபுரத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளை எதிரே வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்ப... மேலும் பார்க்க

ஓய்வூதியதாரா்கள் குறைதீா் நாள் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், ஓய்வூதியதாரா்கள் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்சி மண்டல கருவூலம் மற்றும் கணக்குத் துறை இணை இயக்குநா் கே. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க