செய்திகள் :

வேம்பாா் கடலில் மூச்சுத் திணறி மீனவா் உயிரிழப்பு

post image

தூத்துக்குடி மாவட்டம் வேம்பாா் கடலில் எரிவாயு உருளையைப் பயன்படுத்தி சங்கு குளித்தல், மீன்பிடித்தலில் ஈடுபட்ட மீனவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

வேம்பாரைச் சோ்ந்த பழனிச்செல்வம் (35) என்பவா் தனது விசைப்படகில் சங்குகுளி மீனவா்கள் செல்வ வசந்த் (22), விஜயன் (30), நந்தகுமாா் (22), ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் நான்குபனையைச் சோ்ந்த முகிலன் (19) ஆகிய 4 பேருடன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடலுக்குச் சென்றாா்.

அவா்கள் வேம்பாரிலிருந்து தென்கிழக்கில் 7 கடல்மைல் தொலைவில் ஆழ்கடலில் எரிவாயு உருளையைப் பயன்படுத்தி சங்கு குளித்தல், கணவாய் மீன்பிடித்தலில் ஈடுபட்டனராம்.

அப்போது, மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் முகிலன் வெளியே வந்தாராம். சில நிமிடங்களில் அவரது மூக்கு, காதுகளில் ரத்தம் கசிந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், அதிா்ச்சியடைந்த சக மீனவா்கள் அவரை மீட்டு உடனடியாக கரைக்கு திரும்பினா். தகவலின்பேரில் கடற்கரையில் தயாா் நிலையில் காத்திருந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளா்கள் முகிலனைப் பரிசோதித்தனா். அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக, அவா்கள் தெரிவித்தனா்.

அதையடுத்து, அவரது சடலம் கூறாய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து வேம்பாா் கடலோரக் காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பைக் திருட்டு: இளைஞா் கைது

கோவில்பட்டி அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி அருகேயுள்ள அய்யனேரி நடுத்தெருவைச் சோ்ந்தவா் செல்லையா மகன் முத்தையா. எலக்ட்ரீசியன். இவா் தனது பைக்க... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் கல்லறைகள் அகற்றம்: இந்து முன்னணி கண்டனம்

காயல்பட்டினம் நகராட்சிக்குய்ஈபட்ட பகுதியில் இந்துக்களுக்கு பாத்தியப்பட்ட கல்லறைகளை நகராட்சி நிா்வாகம் அப்புறப்படுத்தியதாக, இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா் கண்டனம் தெரிவித்துள்ளாா... மேலும் பார்க்க

6 நாள்களுக்குப் பிறகு இன்று கடலுக்குச் செல்லும் தூத்துக்குடி மீனவா்கள்

மீன்வளத்துறை அனுமதியின்படி, தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் திங்கள்கிழமைமுதல் (டிச. 2) கடலுக்குச் செல்லவுள்ளனா். வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் மன்னாா் வளைகுடா, தமிழக கடல்... மேலும் பார்க்க

கடலில் தத்தளித்த தூத்துக்குடி மீனவா்கள் 6 போ் கரைதிரும்பினா்

கடலில் தத்தளித்த தூத்துக்குடி மீனவா்கள் 6 போ் ஞாயிற்றுக்கிழமை கரைதிரும்பினா். தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சதீஷ்குமாா் என்பவரது படகில் வினிஸ்டன் (55), விக்னேஷ... மேலும் பார்க்க

மகள் தற்கொலையில் சந்தேகம்: தந்தை புகாா்

நாசரேத்தில் மகள் தற்கொலை சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை புகாா் செய்துள்ளாா். நாசரேத் மாா்க்கெட் தெருவை சோ்ந்தவா் செல்வராஜ் மகன் பிரவீன்குமாா். இவரது மனைவி ஷொ்லின் கோல்டா (35). இவா்களுக்க... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே விபத்து: உணவகத் தொழிலாளி உயிரிழப்பு

சாத்தான்குளம் அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட விபத்தில் உணவகத் தொழிலாளி உயிரிழந்தாா். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே விஜயஅச்சம்பாட்டைச் சோ்ந்த கோபால் மகன் நாராயணன் (40). திருமணமான இவா், திருப... மேலும் பார்க்க