செய்திகள் :

வேலூர்: மூளைச்சாவடைந்த இளைஞர்... இறந்தும் 6 பேருக்கு மறு வாழ்வு - நெகிழும் உறவினர்கள்!

post image

பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் மெக்கானிக் வேலை செய்து வந்தார் அருள் (வயது 24). இவர் பொங்கல் பண்டிகை கொண்டாட கடந்த 14-ம் தனது சொந்த ஊரான வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த மகமதுபுரம் கிராமத்திற்கு வந்துள்ளார். இவர் சொந்த ஊரான மகமதுபுரம் அருகே பைக்கில் வந்தபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதினார். மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட அருள் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு வேலூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து 14-ம் தேதியிலிருந்து 18-ம் தேதி வரை நான்கு நாள்கள் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். இந்நிலையில் கடந்த 18-ம் தேதி இரவு அவர் மூளை சாவு அடைந்தார். மூளை சாவு அடைந்த அருளின் குடும்பத்தார் அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.

அருள்

இது குறித்து நம்மிடம் பேசிய மருத்துவமனை நிர்வாகத்தினர், “அருள் அவர்கள் ஜனவரி 18-ம் தேதி இரவு மூளை சாவு அடைந்தார். அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய அவருடைய உறவினர்கள் முன் வந்தனர். அதனால் அவருடைய சிறுநீரகங்கள், இருதயம், கண்கள், கல்லீரல் ஆகிய உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன. இதனால் 6 பேர் மறுவாழ்வு பெற்று உள்ளனர். இதில் ஒரு சிறுநீரகம் இந்த மருத்துவமனையிலேயே உறுப்பு மாற்றம் செய்துள்ளோம். மற்றொரு சிறுநீரகத்தை சென்னை காவேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்” என்று கூறினர். 

அருளின் சிறு வயதிலேயே அவருடைய பெற்றோர்கள் இறந்துவிட்டனர். அதனால் அவர் அவருடைய தாத்தா கோவிந்தசாமியின் அரவணைப்பில்தான் வளர்ந்து வந்துள்ளார். இவருக்கு என பெரிய சொந்தங்கள் இல்லாத போதிலும், அவருடைய நண்பர்கள் உடன் தான் அவர் வாழ்ந்து வந்துள்ளார். அருளின் பிரிவில் வாடும் அவரின் குடும்பத்திடம் பேசியபோது, “அருள் பொங்கல் பண்டிகை கொண்டாடத்தான் பெங்களூருவில் இருந்து இங்கு வந்தான். ஆனால் அவன் ஊருக்கு வரும் போதே இப்படி விபத்து நடந்துவிட்டது. எப்படியும் காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் அவனை இறைவன் அழைத்துச் சென்றுவிட்டார். இறந்தபோதும் 6 பேருக்கு வாழ்வு தந்துவிட்டு மறைந்துள்ளான்” என்றனர். 

எடுத்துச் செல்லப்படும் உறுப்புகள்

அருள் அவர்களின் இறுதிச்சடங்கு நேற்று முன்தினம் நடந்தது. இறப்பிற்கு பிறகு உடல் உறுப்பு தானம் செய்யும் நபர்களின் இறுதிச்சடங்கில் அரசு சார்பில் மலர் வளையம் செலுத்தி அஞ்சலி செலுத்தப்படும் என்ற முறையில், அருள் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

வேலூர் வருவாய் கோட்டாட்சியர் முருகன், அணைக்கட்டு தாசில்தார் வேண்டா ஆகியோர், அருள் அவர்களின் உடலுக்கு அரசு மரியாதை செய்தனர். இறந்தும் 6 பேருக்கு மறு வாழ்வளித்த அருளின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என அந்த ஊர் பொது மக்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

கடலூர்: ஓய்வு பெற்ற ஆசிரியையின் கண்கள் தானம்; 4 பேருக்கு பார்வை கிடைத்தது!

கடலூர் மாவட்டம், குண்டு உப்பலவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் லலிதாம்பாள். ஓய்வு பெற்ற தலைமையாசிரியையான இவர், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 18-ம் தேதி உயிரிழந்தார். அதையடுத்து அவரின் மகன்களான செல்வகுமாரும்,... மேலும் பார்க்க

`இன்னும் இன்னும் நல்லா இரு தங்கம்'- தமிழ்நாடே பதறிப்போன விபத்து; தன்யஸ்ரீ எப்படியிருக்கிறாள்?

தண்டையார்பேட்டையில் 2018-ம் வருடம் ஜனவரி மாதம் நடந்த அந்த சம்பவம் ஒருவருடைய குடிப்பழக்கம் அவருக்கு சம்பந்தமே இல்லாத ஒரு குழந்தையின் வாழ்க்கையில் எத்தகைய பயங்கரத்தை ஏற்படுத்தும் என்று மொத்த தமிழ்நாட்டு... மேலும் பார்க்க

டெலிவரி பாய் டு நீதிபதி... படிப்பால் உயர்ந்த கேரள இளைஞரின் வெற்றிக்கதை!

"நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ" என்ற பாரதியாரின் வரிதான் யாசின் ஷா முகமது பல தடைகளையும் பின்னடைவுகளையும் கடந்து வெற்றி பெறுவதற்கான நெருப்பை அவருள் நிலைத்திருக்கச் செய்துள்ளது. சாதாரண டெலிவரி பாயாக பண... மேலும் பார்க்க

`மாட்டுப் பொங்கலை நம்பித்தான் எங்க பானையில சோறு' - நெட்டி மாலையும்... நாரணமங்கல மக்கள் வாழ்வும்!

தமிழர்களின் பாரம்பர்யத்தை வெளிப்படுத்த பல பண்டிகைகள் இருந்தாலும், தை திருநாளன்று விவசாயிகளுக்குப் பெரிதும் உதவும் கால்நடைகளை போற்றும் விழாவாகப் பார்க்கப்படுவது மாட்டுப் பொங்கல். அந்நாளன்று உழவர் குடிம... மேலும் பார்க்க

``காய்ச்சல்'னு போனோம்; இப்ப உயிருக்குப் போராடுறா!" - 9 வயது மகளின் சிகிச்சைக்கு உதவி கேட்கும் அப்பா!

"யாழினி எப்பவும் சந்தோஷமா, சிரிச்சுட்டே இருக்கிற குழந்தை. நமக்கு ஏதாச்சும் கஷ்டம், சோகம் இருந்தாகூட... ஓடி வந்து கதை கதையா சொல்ற அவளோட மலர்ந்த முகத்தை பார்த்ததுமே நம்ம மனசுக்கும் அவளோட மகிழ்ச்சி தொத்த... மேலும் பார்க்க