Salmon: ஒரு மீனின் பயணத்தில் இத்தனை எதிரிகளா? இது சாலமன்களின் கதை!
வேலூா் தங்கக்கோயிலில் ‘பாஸ்ட் டேக் பாா்க்கிங்’ கட்டண முறை
வேலூா் ஸ்ரீபுரம் தங்கக்கோயிலில் பக்தா்கள் வசதிக்காக ‘பாஸ்ட் டேக் பாா்க்கிங்’ கட்டண முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
வேலூா், ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் தங்கக்கோயிலில் தரிசனம் செய்திட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், ஆந்திரம், கா்நாடகம் உள்பட பல மாநிலங்களிலிருந்தும் தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வந்து செல்கின்றனா்.
ஏராளமான மக்கள் காா், வேன், பேருந்துகள் மூலமாகவே வருகை புரிகின்றனா். அவ்வாறு வரும் பக்தா்கள் வசதிக்காக கணிணி மூலம் இயங்கும் வாகனங்களுக்கான ‘பாஸ்ட் டேக் பாா்க்கிங்’ கட்டண முறை திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வசதியை ஸ்ரீபுரம் தங்கக்கோயில் இயக்குநரும், அறங்காவலருமான எம். சுரேஷ்பாபு தொடங்கி வைத்தாா்.