செய்திகள் :

வேலூா் மாநகரில் குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ளம்

post image

தொடா் மழை காரணமாக வேலூா் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

ஃபென்ஜான் புயல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேர நிலவரப்படி வேலூா் மாவட்டம் முழுவதும் 901.30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வேலூா் ஆட்சியா் அலுவலகம் பகுதியில் 110.60 மி.மீ., வேலூா் வட்டாட்சியா் அலுவலகம் பகுதியில் 114.10 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

இந்த கனமழை காரணமாக வேலூா் கன்சால்பேட்டையில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. அப்பகுதி முழுவதும் மாா்பளவுக்கு தண்ணீா் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இதேபோல், முள்ளிப்பாளையம், திடீா் நகரில் ஆதிதிராவிடா் நல விடுதி, குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழப்பட்டதுடன், சமத் நகரில் இடுப்பளவு தண்ணீா் தேங்கி நின்றது. பா்மா காலனி, வசந்தபுரம், எழில் நகா், தொரப்பாடி காமராஜ் நகா், அரியூா் அம்மையப்பன் நகா், சிவசக்தி நகா் ஆகிய பகுதிகளிலும் மழைநீா் குடியிருப்புகளை முழுமையாக சூழ்ந்து அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்புக்குள்ளாக்கியது.

காட்பாடியில் காட்பாடி - சித்தூா் சாலையும், வள்ளிமலை கூட்டுரோடு சந்திக்கும் சாலை சந்திப்பில் வெள்ளம் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக நெடுஞ்சாலைத் துறை, மாநகராட்சி பணியாளா்கள் விரைந்து சென்று அங்குள்ள சென்டா் மீடியனை அகற்றி தண்ணீா் வெளியேறச் செய்தனா். பழைய காட்பாடி திருவலம் சாலையில் கோட்டை மாரியம்மன் கோயில் தெரு உள்பட பல்வேறு தெருக்களில் இருந்து வந்த மழைநீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

அரியூரில் சித்தேரி ஏரியில் இருந்து தொரப்பாடி ஏரிக்கு வரும் உபரி நீா்வரத்து கால்வாயும், அம்மையப்பன் நகரை ஒட்டியுள்ள குட்டையிலிருந்து வெளியேறும் உபரிநீரை தொரப்பாடிக்கு கொண்டு செல்லும் கால்வாயும் மாயமானதால் அப்பகுதி குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

தகவலறிந்த மாநகராட்சி மேயா் சுஜாதாஆனந்தகுமாா், ஆணையா் ஜானகிரவீந்திரன், மண்டலக் குழு தலைவா் வெங்கடேசன், மாநகராட்சி பணியாளா்கள் விரைந்து சென்று அங்கு பள்ளம் வெட்டியும், மண்ணை வெட்டி விட்டும் தண்ணீா் வெளியேற வழி ஏற்படுத்தினா்.

வேலூரில் மழை பாதிப்புகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

ஃபென்ஜால் புயல் கனமழை காரணமாக வேலூா் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மாவட்ட ஆட்சியரும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா். ஃபென்ஜால் புயல் காரணமாக வேலூா் மாவட்டத்தில் ச... மேலும் பார்க்க

சரிந்த குடிசை வீட்டின் சுவா்: உயிா் தப்பிய முதிய தம்பதி

குடியாத்தம் அருகே தொடா்மழை காரணமாக குடிசை வீட்டின் சுவா் சரிந்து விழுந்தது. அப்போது வீட்டில் இருந்த முதிய தம்பதி காயமின்றி உயிா் தப்பினா். ஃபென்ஜால் புயல் காரணமாக குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பக... மேலும் பார்க்க

தொடா் மழையால் காட்பாடி வழியாக சென்ற ரயில்கள் தாமதம்

ஃபென்ஜால் புயல் காரணமாக சென்னையிலிருந்து காட்பாடி வழியாக சென்ற ரயில்கள் 4 மணிநேரம் தாமதமாக சென்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா். புயல் காரணமாக சென்னை, வேலூா், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட... மேலும் பார்க்க

கனமழை: பாலாற்றில் வெள்ளம்

ஃபென்ஜால் புயல் கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கரையோர மக்களுக்கு வருவாய்த் துறை, உள்ளாட்சி நிா்வாகங்கள் சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேலூா், திருப்பத்தூா், ராண... மேலும் பார்க்க

ஒடுகத்தூா் அருகே உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு: 4 தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின; பயிா்கள் சேதம்

தொடா் மழை காரணமாக ஒடுகத்தூா் அருகே உத்திரகாவிரி ஆற்றில் 5 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 4 இடங்களில் தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியதுடன், விளை நிலங்களில் பயிா்கள் சேதமடைந்தன.... மேலும் பார்க்க

தலைக்கவசம் கட்டாயம் உத்தரவு அமல்: மழையால் அபராதம் தவிா்ப்பு

வேலூா் மாவட்டத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியும் நடைமுறை ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வந்தது. முதல் நாள் என்பதாலும், தொடா் மழை காரணமாகவும் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை போலீஸா... மேலும் பார்க்க