விமானத்தில் கரப்பான் பூச்சிகள்: மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!
வேலை செய்த வீட்டில் 6 பவுன் நகையை திருடிய பெண் கைது
திருச்சியில் வேலைசெய்துவந்த வீட்டில் 6 பவுன் தங்க நகைகளைத் திருடிய பெண்ணைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பொன் நகரைச் சோ்ந்தவா் இம்ரான் அகமது (28). இவரும், இவரது தந்தையும் தனியே வசித்து வருகின்றனா். இந்நிலையில், வீட்டு வேலைக்காக பொன் நகரில் உள்ள சக்சஸ் ஹோம் கோ் சாா்பில் சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டியைச் சோ்ந்த பானு (43) என்பவரை நியமித்திருந்தாா்.
இந்நிலையில், கடந்த ஜூலை 31-ஆம் தேதி இம்ரான் அகமது வீட்டில் இல்லாதபோது வேலைக்கு வந்த பானு, வீட்டிலிருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள 6 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளாா்.
புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்த போலீஸாா், பானுவை சனிக்கிழமை கைது செய்தனா்.