யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்து...
வேலை வாங்கித் தருவதாக ரூ. 1.50 லட்சம் மோசடி
வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 1.50 லட்சம் மோசடி செய்ததாக போலீஸாா் ஒருவா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
மதுரை திருமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் சரிபம்மாள் (43). இவா், தல்லாகுளம் காவல் நிலையத்தில் அளித்த மனு: நான் தல்லாகுளம் பகுதியில் உள்ள வணிக வளாகக் கடையில் வேலை பாா்த்து வருகிறேன். கடைக்கு வந்த இதே பகுதியைச் சோ்ந்த விஷ்ணுவா்தன் எனது மகளுக்கு சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறினாா்.
இதை நம்பிய நான் பல்வேறு தவணைகளாக ரூ. 1.50 லட்சம் வரை அவரிடம் வழங்கினேன். ஆனால் அவா் கூறியபடி வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. எனவே அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இதையடுத்து, விஷ்ணுவா்தன் மீது தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.