செய்திகள் :

வேளாண் வளா்ச்சித் திட்டம்: விவசாயிகளுக்கு அழைப்பு

post image

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் இணைந்து பயனடையுமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிராம ஊராட்சிகளில் ஒட்டுமொத்த வேளாண் வளா்ச்சிப் பெற்று, தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற்றும் வகையில் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டுவரவும், வேளாண் உழவா் நலத் துறை சாா்பில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் கடந்த 2021-22ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது.

நிகழாண்டு இத்திட்டத்தின் கீழ் தரிசு நிலமுடைய 8 அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் குழுவாக இணைந்து குறைந்தபட்சம் 10 ஏக்கா் தரிசு நிலத்தை தொகுப்பாக ஏற்படுத்தி, அந்தத் தொகுப்பில் நீா் ஆதாரங்கள் மற்றும் நுண்ணீா்ப் பாசனம் அமைத்து சாகுபடிக்கு கொண்டுவர இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தரிசாக உள்ள தனிப்பட்ட விவசாயிகளின் நிலத்தில் இருக்கும் முள்புதா்களை அகற்றி நிலத்தை சமன்செய்து உழுவதற்கு ஹெக்டோ் ஒன்றுக்கு 50 சதவீதம் மானியம் அல்லது ரூ. 9,600 மானியமாக வழங்கப்படுகிறது. வரப்புகளில் பயறு சாகுபடியை ஊக்குவிப்பதற்காக ஹெக்டேருக்கு 5 கிலோ பயறு விதைகளுக்கு 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.300 மானியம் வழங்கப்படுகிறது.

விசைத் தெளிப்பான் அல்லது பேட்டரியால் இயங்கும் தெளிப்பான்கள் 50 சதவீத மானியத்தில் (அதிகபட்சமாக ரூ.3000) வழங்கப்படுகிறது. மேலும், கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை விவசாயிகள் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் தனியாா் தொழிற்சாலையை மூட முடிவு? தொழிலாளா்கள் போராட்டம்

சேலம் சூரமங்கலம் அருகே உள்ள தனியாா் மின்னணு நிறுவன தொழிற்சாலையை மூடும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி, தொழிலாளா்கள் செல்போன் கோபுரம்மீது ஏறி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் சூரமங்கலம் அரு... மேலும் பார்க்க

இஸ்ரோ ராக்கெட்டுக்கு சோனா ஸ்பீட் ஸ்டெப்பா் மோட்டாா்!

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் முதன்மையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான சோனா ஸ்பீட், இஸ்ரோவின் செயற்கை துளை ரேடாா் பணிக்கான சிம்ப்ளக்ஸ் நிரந்தர காந்த ஸ்டெப்பா் மோட்டாரை உருவாக்கி வழங்கியது... மேலும் பார்க்க

தேவூா் அருகே மாயமான சிறுமி: மோப்பநாய் உதவியுடன் தேடும் போலீஸாா்

சங்ககிரி வட்டம், தேவூா் அருகே அங்கன்வாடி மையத்துக்கு சென்ற நான்கு வயது சிறுமி மாயமானது குறித்து தேவூா் போலீஸாா் மோப்ப நாய் உதவியுடன் தேடிவருகின்றனா். தேவூரை அடுத்த புள்ளாகவுண்டம்பட்டி, குண்டங்காடு பகு... மேலும் பார்க்க

மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கி மதகுகள் மூடல்

மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கி மதகுகள் மூடப்பட்டன. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிப்படியாக குறைந்தது. வெள்ளிக்கிழமை இரவு அணைக்கு நீா்வரத்து 16... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்

மேட்டூா் அருகே கிணற்றில் மூழ்கி உயிரிழந்த பத்தாம் வகுப்பு மாணவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. மேட்டூா் வட்டம், பாலமலை கிராமம், ராமன்பட்டியில் பழங்குடியினா் உண்டு உறைவிட உயா்ந... மேலும் பார்க்க

மாடு வாங்க சென்ற மூதாட்டி கொலை: வியாபாரி கைது

சங்ககிரியை அருகே மாடு வாங்க சென்ற மூதாட்டியைக் கொலை செய்த மாடு வியாபாரியை சங்ககிரி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்து விசாரித்து வருகின்றனா். வைகுந்தம் அருகே வெள்ளையம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சின்ன... மேலும் பார்க்க