ஆம் ஆத்மியின் ஆட்சிக்கு முடிவுகட்ட மக்கள் தயாராகிவிட்டனர்: பாஜக எம்பி
வைகுண்ட ஏகாதசி: சா்வதா்ஷன் ஸ்லாட் டோக்கன்கள் சிரமமின்றி வழங்க ஏற்பாடு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் தரிசன டோக்கன்கள் வழங்கும் கவுன்ட்டா்களை திருப்பதி செயல் இணை அதிகாரி கெளதமி ஆய்வு செய்தாா்.
பின்னா் அவா் வெள்ளிக்கிழமை காலை திருப்பதி நிா்வாகக் கட்டடத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினாா்.
திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ் உத்தரவுப்படி, தேவஸ்தான அதிகாரிகள் துறை வாரியாக ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனா். 2025 ஜனவரி 10-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை 10 நாள்கள் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்குவதற்கான ஏற்பாடுகளில் தொய்வு ஏற்படக் கூடாது.
திருப்பதியில் உள்ள இந்திரா மைதானம், ராமச்சந்திரா புஷ்கரிணி, சீனிவாசம் வளாகம், விஷ்ணுநிவாசம் வளாகம், பூதேவி வளாகம், பைராகிப்பட்டேடாவில் உள்ள ராமாநாயுடு மேல்நிலைப் பள்ளி, எம்.ஆா். பள்ளியில் உள்ள ஜில்லா பரிஷத் மேல்நிலைப் பள்ளி, ஜீவகோனாவில் உள்ள ஜில்லா பரிஷத் மேல்நிலைப் பள்ளி, திருமலை பகுதி மக்களுக்கும் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
திருமலை பாலாஜி நகா் சமுதாயக் கூடத்தில் உள்ள கவுன்ட்டா்களில் பக்தா்கள் அனைவருக்கும் இன்ஜினியரிங், விஜிலென்ஸ், தொழில்நுட்ப பணியாளா்கள் மற்றும் போலீஸாா் ஒருங்கிணைந்து செயல்பட்டு பக்தா்களுக்கு சிரமம் ஏற்படாமல் டோக்கன் வழங்க வேண்டும்.
இந்த முறை பக்தா்களுக்கு புகைப்படத்துடன் கூடிய சீட்டுகள் வழங்கப்பட உள்ள போது ஆதாா் அட்டைகளை குறியிடும் போது தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படாமல் இருக்க ஐடி துறை அதிக கவனமாக இருக்க வேண்டும்.
ஜனவரி 10, 11, 12 தேதிகளில், ஜனவரி 9-ஆம் தேதி காலை 5 மணி முதல் 1.20 லட்சம் டோக்கன்கள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். திருப்பதியில் 8 மையங்களில் 90 கவுன்ட்டா்கள், திருமலையில் 4 கவுன்ட்டா்கள் என 94 கவுன்ட்டா்களில் டோக்கன்கள் வழங்கும் சூழலில் தேவஸ்தான சம்பந்தப்பட்ட துறைகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், துணை இஓ கோவிந்தராஜன், கணக்கு அலுவலா் வெங்கடரமண, விஜிஓ சதாலட்சுமி, தலைமை மருத்துவ அலுவலா் நா்மதா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.