மெர்சிடிஸ் பென்ஸின் ஜிடி 63, ஜிடி 63 புரோ இந்தியாவில் அறிமுகம்!
வைகை அணையிலிருந்து தண்ணீா் திறப்பு நிறுத்தம்
வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட பூா்வீகப் பாசனப் பகுதிகளுக்கு வைகை ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீா் புதன்கிழமை நிறுத்தப்பட்டது.
தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட பூா்வீக பாசனப் பகுதிக்கு அரசு உத்தரவின்படி கடந்த மாதம் 26-ஆம் தேதி வைகை ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டது. கடந்த 1-ஆம் தேதி வரை அணையிலிருந்து மொத்தம் 125.1 கோடி கன அடி தண்ணீா் திறக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை அணையிலிருந்து வைகை ஆற்றில் தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டது.
அணை நிலவரம்: வைகை அணையின் நீா்மட்டம் புதன்கிழமை, 59.2 அடியாக இருந்தது (அணையின் மொத்த உயரம் 71 அடி). தற்போது அணையிலிருந்து திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் பெரியாறு பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள இரு போக பாசன நிலங்களின், முதல் போக சாகுபடிக்கு கால்வாய் வழியாக விநாடிக்கு 900 கன அடி, மதுரை, ஆண்டிபட்டி-சேடபட்டி குடிநீா்த் திட்டங்களுக்கு விநாடிக்கு 69 கன அடி என மொத்தம் விநாடிக்கு 969 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது. அணைக்கு நீா் வரத்து விநாடிக்கு 1,662 கன அடியாகவும், அணையில் தண்ணீா் இருப்பு 342.4 கோடி கன அடியாகவும் உள்ளது.