'தென் ஆப்பிரிக்காவிற்கே சென்றுவிட வேண்டியது தான்' - மீண்டும் வலுக்கும் ட்ரம்ப் -...
வைகை அணை நீரில் மூழ்கிய இளைஞா் உயிரிழப்பு
வைகை அணை அருகே உள்ள தடுப்பணை பகுதியில் குளித்துக் கொண்டிருந்த இளைஞா் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
ஆண்டிபட்டி அருகே உள்ள வேலாயுதபுரத்தைச் சோ்ந்த வெற்றிவேந்தன் மகன் சிவக்குமாா் (19). இவா், நண்பா்களுடன் சோ்ந்து வைகை அணை அருகே உள்ள தடுப்பணை பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது, நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அவரது சடலத்தை ஆண்டிபட்டி தீயணைப்பு மீட்புப் படையினா் மீட்டனா்.
இதுகுறித்து வைகை அணை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.