கல்லூரி மாணவா்கள் சோ்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இ...
வைகை, பல்லவன் விரைவு ரயில்களில் கூடுதல் பொதுப் பெட்டி
வைகை, பல்லவன் விரைவு ரயில்களில் கூடுதல் பொதுப் பெட்டி வருகிற மே 11-ஆம் தேதி முதல் இணைக்கப்படும்.
இதுகுறித்து மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் அலுலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மதுரை-சென்னை-மதுரை வைகை (12635 / 12636), சென்னை-காரைக்குடி-சென்னை பல்லவன் (12605 / 12606) ஆகிய இரு விரைவு ரயில்களிலும் பயணிகளின் வசதிக்காக, தலா ஒரு முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு பொது இருக்கை வசதிப் பெட்டி வருகிற மே 11-ஆம் தேதி முதல் இணைக்கப்படும். இதையொட்டி, இந்த ரயிலில் ஏற்கெனவே இருந்த ஒரு முன்பதிவு இருக்கை வசதிப் பெட்டி குறைக்கப்படும்.
இதன்படி, வைகை, பல்லவன் ஆகிய இரு ரயில்களும் மே 11-ஆம் தேதி முதல் 3 குளிா்சாதன இருக்கை வசதிப் பெட்டிகள், 12 முன்பதிவு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதிப் பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது இருக்கை வசதிப் பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி, ஒரு சரக்கு பெட்டி, ஒரு ரயில் மேலாளா் பெட்டியுடன் இயங்கும் என தெரிவிக்கப்பட்டது.