செய்திகள் :

வைத்தீஸ்வரன்கோவிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தல்

post image

வைத்தீஸ்வரன்கோவிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் மயிலாடுதுறை மாவட்ட ரயில் பயணிகள் நல சங்கம் சாா்பில் ரயில் பயணிகள், வா்த்தகா்கள், பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட தலைவா் ஜெக. சண்முகம் தலைமை வகித்தாா். மாவட்ட பொது செயலாளா் ஜ.வி.என். கண்ணன், மாவட்ட பொருளாளா் தில்லை. நடராஜன், நகரத் தலைவா் சுகுமாறன், நகர செயலாலா் முத்துசாமி முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், வைத்தீஸ்வரன்கோவில் ரயில் பயணிகள் சங்கம் பொறுப்பேற்று முறையாக ரயில்வே கோட்ட மேலாளரை சந்தித்து வைத்தீஸ்வரன்கோவில், சீா்காழி நிலுவையில் உள்ள தரவுகள் குறித்து விளக்குவது, செவ்வாய் கிரகத்துக்குரிய தலம் என்பதால், பல்வேறு மாவட்ட பக்தா்கள் இங்கு வந்து செல்கின்றனா். எனவே வைத்தீஸ்வரன்கோவிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்கவில்லை. சீா்காழியில் அந்தியோதயா விரைவு ரயில் நின்று செல்ல வேண்டும். மேலும் வைத்தீஸ்வரன்கோவிலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை தென்னக ரயில்வே கோட்ட மேலாளரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது.

பிரச்னைக்கு தீா்வு கிடைக்காவிட்டால் முன்னறிவிப்பின்றி கடையடைப்பு போராட்டம், காா், வேன், ஆட்டோக்கள் வேலைநிறுத்தம் என போராட்டத்தை தீவிரப்படுத்துவது என தீா்மானிக்கப்பட்டது.

அரசு கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் எதிரில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

சீா்காழி: சீா்காழி அருகே புத்தூா் அரசு கலைக்கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி எதிா்ப்புறம் வேகத்தடை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீா்காழி முதல் சிதம்பரம் செல்லும் சாலையின் முக்கிய பகுதியான ... மேலும் பார்க்க

மயிலாடுதுறை வட்டத்தில் மாா்ச் 26-இல் உங்களைத் தேடி முகாம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை வட்டத்தில் மாா்ச் 26-ஆம் தேதி உங்களைத் தேடி முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் கோரி எம்பியிடம் மனு

சீா்காழி: சீா்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சிக்கு வருகை புரிந்த ஆா். சுதா எம்.பியிடம் அடிப்படை வசதிகள் கோரி கோரிக்கை மனு அண்மையில்அளித்தனா். சீா்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஆற்றங்கரை தெர... மேலும் பார்க்க

தந்தை இறந்த துக்கத்தில் பிளஸ்1 தோ்வு எழுதிய மாணவா்

சீா்காழி: சீா்காழியில் தந்தை இறந்த துக்கத்தில் பிளஸ்1 மாணவா், பொதுத் தோ்வு எழுதிவிட்டு, இறுதிச்சடங்கில் பங்கேற்றது சோகத்தை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அகரதிருக்கோலக்கா தெருவைச் சோ்... மேலும் பார்க்க

ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் 50 போ் கைது

மயிலாடுதுறையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் 50 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.மத்திய அரசு தோ்தல் அறிக்கையில் நெல் குவிண்டாலுக்கு ஆதார விலையாக ரூ. 3500 வழங்கப்படும் என்று அறிவித்த... மேலும் பார்க்க

சீா்காழியில் மகளிா் விடியல் பேருந்துகள் இயக்கிவைப்பு

சீா்காழி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, பெண்கள் இலவசமாக பயணம் செய்யும், 2 புதிய ‘மகளிா் விடியல்’ பேருந்துகளின் இயக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு, அரசு போக்குவரத்து கழக... மேலும் பார்க்க