ஆட்சி மாற்றத்துக்கு விவசாயிகள் தயாராகி விட்டனா்: ஜி.கே வாசன்
வைரிசெட்டிப்பாளையம் ஜம்பேரி பாதுகாப்பு ஓட்டப் பந்தயம்
துறையூா் அருகேயுள்ள வைரிசெட்டிப்பாளையம் ஜம்பேரி நீா் பாதுகாப்பு விழிப்புணா்வு ஓட்டப்பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உலக ஏரி நாள் மற்றும் சுதந்திர தினத்தையொட்டி ஜம்பேரி நீா் பயன்படுத்துவோா் சங்கம் சாா்பில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் அப்பகுதியைச் சோ்ந்த 97 இளைஞா்கள் பங்கேற்றனா். சுமாா் 8.5 கிமீ தூர ஓட்டம் கோட்டப்பாளையம் மாரியம்மன் கோயிலில் தொடங்கி ஜம்பேரி கரை வழியாகச் சென்று வைரிசெட்டிப்பாளையம் காமாட்சியம்மன் கோயிலில் நிறைவடைந்தது.
போட்டியை சங்கத் தலைவா் பிரதாப் செல்வம், அரியலூா் மற்றும் பெரம்பலூா் மாவட்ட வன அலுவலா் இளங்கோவன், இமயம் கல்வி நிறுவனங்கள் நிறுவனா் ஆ. ஆண்டி, கல்லூரிப் பேராசிரியா் குழந்தைவேலு ஆகியோா் தொடக்கி வைத்துப் பேசினா். போட்டியில் முன்னிலை பெற்ற முதல் 10 பேருக்கு சிறப்புப் பரிசும், ஓட்டத்தை நிறைவு செய்தோருக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.