மின் வாகன உற்பத்தி: 2030-இல் இந்தியா முதன்மை நாடாகும்: நிதின் கட்கரி
ஷ்ரேயாஸ் ஐயரின் உலகத்தரமான பேட்டிங்..! வில்லியம்சன் புகழாரம்!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங்கை நியூசி. வீரர் கேன் வில்லியம்சன் புகழ்ந்து பேசியுள்ளார்.
பஞ்சாப் - குஜராத் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரின் 5-வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 243 ரன்கள் குவித்தது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயர் 97* ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.
ஜியோஸ்டார் எக்ஸ்பெர்ட் நிகழ்ச்சியில் வில்லியம்சன் பேசியதாவது:
வலிமைமிக்க பேட்டர்
சிலகாலமாக ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஷார்ட் பந்துகள் பிரச்னையாக இருந்தன. ஆனால், தற்போது அவர் அதை புத்திசாலித்தனமாக சமாளித்துள்ளார். கிரீஸில் உள்ளே இருந்து முன்னங்காலில் எடையைக் குறைத்து ஷார்ட் பிட்ச் பந்துகளை அடித்து நொற்குக்கிறார்.
ஷ்ரேயாஸின் திறமை எது வியக்க வைக்கிறது என்றால் அவரால் மீண்டும் தனது எடையை முன்னோக்கி வரவைக்கிறார். இது பந்துவீச்சாளர்களுக்கு ஷார்ட் பந்துகளையும் ஃபுல்லராகவும் வீசவும் கடினத்தை உருவாக்குகிறது.
ஷ்ரேயாஸ் தற்போது திடலின் அனைத்து பக்கங்களிலும் ஷாட்டுகளை அடிக்கிறார். அது அவரை மிகவும் வலிமைமிக்க பேட்டராக மாற்றியுள்ளது.
உயர்தரமான ஆட்டம்
ஷ்ரேயாஸின் இந்த 97 ரன்கள் உயர்தரமான ஆட்டத்தைக் குறிக்கிறது. முதல் பந்திலிருந்தே அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்து எங்குசென்று விழ வேண்டுமோ அங்கு சரியாக அடித்தார்.
அவுட் சைடு ஆஃப் ஸ்டம்பில் பந்தினை வீசினால் அதையும் கவர்சைடில் சிக்ஸர் அடிக்கிறார். அதுவும் உலகின் தலைசிறந்த வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அடிக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் ரஷித் கான் ஓவரில் அடித்து ஆடினார். இந்தப் போட்டியில் அது மிகவும் சவாலன விஷயம்.
அணித் தலைவராக நம்.3இல் களமிறங்கி, போட்டிக்கான ரிதமை தொடங்கி வைத்து எதிரணியினரின் முக்கியமான வீரர்களின் ஓவர்களில் அடித்து நொறுக்கியது முக்கியமானது. இந்த இன்னிங்ஸ் உலகத்திலேயே மிகவும் சிறந்தது என்றார்.