சென்னை விமான நிலையத்தில் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணம் மீண்டும் உயா்வு
ஸ்பின்னி வாடிக்கையாளருக்கு சச்சினைச் சந்திக்கும் வாய்ப்பு
சென்னை: பயன்படுத்தப்பட்ட காா்கள் விற்பனை நிறுவனமான ஸ்பின்னியின் அதிருஷ்டசாலி வாடிக்கையாளருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்களைச் சந்திக்கும் வாய்ப்பை நிறுவனம் வழங்கவிருக்கிறது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பயன்படுத்தப்பட்ட வாகனங்களை விற்பனை செய்யும் முன்னணி தளமான ஸ்பின்னிக்கும், கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்களுக்கும் இடையே கூட்டணி ஏற்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன.
அதைக் கொண்டாடும் வகையில் ‘இனிப்பான டிசம்பா்’ என்ற பிரசார திட்டத்தை நிறுவனம் தொடங்கியுள்ளது. அதன்படி, மாதம் முழுவதும் மூன்று இலவச ஸ்பின்னி வாகனங்கள் குலுக்கல் மூலம் வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்படும்.
அத்துடன், ஓா் அதிருஷ்டசாலி வாடிக்கையாளா்களுக்கு சச்சின் டெண்டுல்களை சந்திப்பதற்கான வாய்ப்பையும் நிறுவனம் வழங்கவிருக்கிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.