உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
ஸ்ரீபாஞ்சாலி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்
ஆரணியை அடுத்த மெய்யூா் ஸ்ரீ பாஞ்சாலி அம்மன் கோயில் அக்னி வசந்த விழாவையொட்டி புதன்கிழமை துரியோதனன் படுகளம் நடைபெற்றது (படம்).
மெய்யூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபாஞ்சாலி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த மாா்ச் 28-ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.
மேலும், ஏப்ரல் 6 முதல் மகாபாரத நாடகம் நடைபெற்று வருகிறது. தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி, குறவஞ்சி, கீசக சம்ஹாரம், கிருஷ்ணன் தூது, அபிமன்யு சண்டை, கா்ணமோட்சம் ஆகிய நாடகங்கள் நடைபெற்றன.
இந்த நிலையில், இறுதி நிகழ்ச்சியாக துரியோதனன் படுகளம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனா். சிறப்பு விருந்தினராக ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்து கொண்டாா்.
தொகுதி திமுக பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், ஒன்றியச் செயலா்கள் மாமது, மோகன், சுந்தா், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை விழாக் குழுவினா் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.