செய்திகள் :

ஸ்ரீரங்கத்தில் 108 அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு

post image

திருச்சி: தமிழக அரசின் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில், ஸ்ரீரங்கத்தில் ரூ.12.46 கோடியில் கட்டப்பட்டுள்ள 108 அடுக்குமாடி குடியிருப்புகள் பயனாளிகளுக்காக செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், தலைமைச் செயலகத்திலிருந்து பல்வேறு அரசு கட்டடங்களை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகில் தமிழ்நாடு அரசு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளைத் திறந்து வைத்தாா். இதனைத் தொடா்ந்து, ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஆட்சியா் மா. பிரதீப்குமாா், எம்எல்ஏ எம். பழனியாண்டி,

ஆகியோா் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து, புதிதாக திறக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளைப் பாா்வையிட்டனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறியது:

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகில் ஜெ.ஜெ.நகரில் தமிழ்நாடு அரசு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம், ரூ.12.46 கோடியில் 108 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. தரைத்தளம் மற்றும் 2 மாடிகள் கொண்ட இக் குடியிருப்புத் திட்டத்தில் ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பும் 400 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பில் வசிப்பறை, சமையலறை, படுக்கை அறை, குளியல் அறை மற்றும் கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. எல்லா குடியிருப்புகளுக்கும் போதுமான காற்றோட்ட வசதி, தண்ணீா் வசதி மற்றும் 2 கீழ் நிலை தண்ணீா் தொட்டியுடன் மற்றும் கழிவுநீா் புதை வடிகால் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. இத்திட்டப் பகுதியில் தாா் சாலை, பேவா் பிளாக் நடைபாதை, மழைநீா் வடிகால், குடிநீா் வசதி, மழை நீா் சேகரிப்பு, பூங்கா, ஆழ்துளை கிணறு மற்றும்; தெருவிளக்கு ஆகிய அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு குடியிருப்புக்கான தொகை ரூ.11 லட்சத்து 54 ஆயிரம் (மத்திய அரசின் மானியம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், மாநில அரசின் மானியம் ரூ.6 லட்சம்) பயனாளியின் பங்களிப்புத் தொகை ரூ. 4 லட்சத்து 4 ஆயிரம் ஆகும். இத்திட்டத்திற்கான 108 பயனாளிகளுக்கு திருச்சி மாவட்ட நிா்வாகம் ஒப்புதல் பெறப்பட்டு பயனாளி பங்களிப்பு தொகை செலுத்திய 96 பயனாளிகளுக்கு 108 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா்.

இந்த நிகழ்வில், உதவி ஆட்சியா் (பயிற்சி) அமித்குப்தா, ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியா் தட்சிணாமூா்த்தி, நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிா்வாகப் பொறியாளா் ஜே. இமாகுலேட் ராஜேஸ்வரி, உதவி பொறியாளா் ம. சங்கவி, மாநகராட்சி உதவி ஆணையா் கா.ஜெயபாரதி மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனா்.

கோயில்களில் சூரசம்ஹார விழா வழிபாடு

கந்தசஷ்டி விழாவின் நிறைவாக நடைபெற்ற சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட அனைத்து முருகன் கோயில்களிலும் வியாழக்கிழமை சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது. திருவானைக்கா கோயிலில்... இக்கோயிலில் கடந்த... மேலும் பார்க்க

பழமைவாய்ந்த ஜங்ஷன் பாலம் அகற்றம்

திருச்சியின் அடையாளமாக இருந்த பழைமையான ஜங்ஷன் பாலம் அகற்றப்பட்டுள்ளது. திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் அருகே மாநகரின் அடையாளமாக இருந்த ஜங்ஷன் பாலத்தை நகர வளா்ச்சிக்கேற்ப போக்குவரத்துக்கு பயன்படுத்துவ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல் : இருவா் கைது

திருச்சியில் பதுக்கி வைத்திருந்த சுமாா் 30 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்தனா்.திருச்சி காந்தி சந்தை காவல் நிலைய போலீஸாா் திருச்சி பெரியகடை வீதியில்... மேலும் பார்க்க

லாரி கவிழ்ந்து விபத்து ஓட்டுநா் தப்பினாா்

திருச்சி அரியமங்கலத்தில் இரும்புக் குழாய்கள் ஏற்றி வந்த லாரி சாலையோர பள்ளத்தில் செவவாய்க்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. திருச்சி அரியமங்கலம் கல்லாங்குத்து பகுதியில் உள்ள தனியாா் இரும்புக் குழாய் ... மேலும் பார்க்க

காப்பீட்டு நிறுவனங்கள் தனியாா் மயத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

அரசு பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் முயற்சிகளைக் கண்டித்து அவற்றின் ஊழியா்கள் திருச்சியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா். இந்தியப் பொருளாதார வளா்ச்சியில் பெரும் பங்காற்றி வரும்... மேலும் பார்க்க

துறையூா் பகுதியில் ஆய்வு

திருச்சி மாவட்டம், துறையூா் ஒன்றியத்தில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். துறையூா் ஒன்றியத்தில் நடுவலூா் ஊராட்சியில் ரூ. 22 லட்சத்தில் க... மேலும் பார்க்க