செய்திகள் :

ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

post image

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவின் சதீஷ் தவான் வி்ண்வெளி ஆய்வு மையத்தில் 3-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த ராக்கெட் ஏவுதளம் 48 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். 3-வது ஏவுதளம் ரூ. 3,985 கோடி செலவில் அமைகிறது.

இதையும் படிக்க: 2 பிள்ளைகளுக்கு மேல் இருந்தால்தான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அனுமதி: ஆந்திர முதல்வர்

இது விண்வெளி உள்கட்டமைப்புத் துறையின் முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்றும் முதல், இரண்டாவது ஏவுதளங்களுடன் ஒப்பிடும்போது மூன்றாவது ஏவுதளத்தின் திறன் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதனை விண்வெளிக்கு அனுப்புதல் உள்ளிட்ட எதிர்கால திட்டத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளம் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

செஸ் போட்டியை ஒலிம்பிக்கில் பார்க்க விரும்புகிறேன்: குகேஷ்

செஸ் போட்டி ஒலிம்பிக்கில் இடம்பெறுவதைப் பார்க்க விரும்புவதாக உலக செஸ் சாம்பியன் குகேஷ் தெரிவித்துள்ளார்.சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனாக வலம் வந்த சீனாவின் டி... மேலும் பார்க்க

வண்டலூர் பூங்கா: 80,000-க்கும் மேற்பட்டோர் வருகை!

பொங்கல் வாரத்தில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் உள்பட 80,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தந்ததாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது பற்றி வண்டலூர்... மேலும் பார்க்க

விஜய் சேதுபதியின் ஏஸ் கிளிம்ஸ் விடியோ!

விஜய் சேதுபதியின் பிறந்த நாளையொட்டி ஏஸ் படத்தின் கிளிம்ஸ் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.கடந்த 2024 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 'மகாராஜா’ மற்றும் ’விடுதலை - 2ம் பாகம்... மேலும் பார்க்க

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 20 காளைகளை அடக்கி அபிசித்தர் முதலிடம்!

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 20 காளைகளை அடக்கி அபிசித்தர் முதலிடத்தைப் பெற்றார்.பொங்கல் பண்டிகையையொட்டி, அலங்காநல்லூரில் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக துணை முதல்வர் உத... மேலும் பார்க்க

பாட்டல் ராதா டிரைலர் அறிவிப்பு!

பாட்டல் ராதா படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.இயக்குநர் பா. இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார்.பரியேறும் பெருமாள் ப... மேலும் பார்க்க

காசிமேட்டில் மீனவர் வெட்டிக் கொலை! 8 பேர் கைது!

காசிமேட்டில் மீனவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை புது வண்ணாரப்பேட்டை நாகூர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (33). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். ... மேலும் பார்க்க