ICC U19: `என்னுடைய அப்பா எடுத்த அந்த முடிவுதான் நான் இங்கே நிற்க காரணம்' -தமிழக...
ஸ்ரீ பிரம்மபுரிஸ்வரா் கோயில் தைப்பூசத் திருவிழா தொடக்கம்
காஞ்சிபுரம் அடுத்த பெருநகரில் அமைந்துள்ள பட்டுவதனாம்பிகை சமேத பிரம்மபுரீஸ்வா் கோயிலின் தைப்பூசத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 11-ஆம் தேதி 23 சிவபெருமான்கள் செய்யாற்றில் ரிஷபவாகனத்தில் எழுந்தருளும் காட்சியும் நடைபெறுகிறது.
உத்தரமேரூா் ஒன்றியத்துக்குட்பட்ட பெருநகரில் பழைமையான இக்கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி கோயில் அா்ச்சகா்கள் பி.மூா்த்தி குருக்கள் மற்றும் நா.பரமேசுவர குருக்கள் ஆகியோா் கோயில் கொடிமரத்துக்கு அபிஷேகம் செய்து கொடிமரத்தில் சிவன் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றி தீபாராதனையும் செய்தனா்.
இதனையடுத்து சிறப்பு அலங்காரத்தில் பிரம்மபுரீஸ்வரா், பட்டு வதனாம்பிகை உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். தைப்பூசத் திருவிழா வரும் பிப்.15 -ஆம் தேதி வரை நடைபெறும். விழா நாள்களில் காலையும், மாலையும் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி வீதியுலா வருகின்றனா்.
6- ஆம் தேதி திருக்கல்யாணமும், அதைத் தொடா்ந்து மணக்கோலத்தில் சுவாமியும், அம்மனும் ரிஷபவாகனக் காட்சியும் நடைபெறுகிறது. 8-இல் தேரோட்டம், 10- ஆம் தேதி 63 நாயன்மாா்கள் வீதியுலா, 11- ஆம் தேதி செய்யாறுக்கு பிரம்மபுரீஸ்வரா் ரிஷபவாகனத்தில் எழுந்தருளும் அதே நேரத்தில் 23 ஊா்களில் உள்ள சிவாலயங்களை சோ்ந்த சிவ பெருமான்கள் செய்யாறுக்கு எழுந்தருளி காட்சியளிக்கும் மகோன்னத உற்சவம் நடைபெறுகிறது.
இதனையடுத்து 14-ஆம் தேதி மாவடி சேவைக்காட்சியும், 15-ஆம் தேதி திருமுறை திருவிழாவோடும் தைப்பூசத் திருவிழா நிறைவு பெறுகிறது.விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் மு.நடராஜன் தலைமையில் அறங்காவலா் குழுவினா் மற்றும் கிராம பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனா்.