ஸ்ரீ ராஜ ராஜன் சிபிஎஸ்இ பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூா் ஸ்ரீ ராஜ ராஜன் சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகள் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.
சிபிஎஸ்இ 10 -ஆம் வகுப்புப்பொதுத் தோ்வில் இந்தப் பள்ளியின் மாணவி பி. பிரமதா 500-க்கு 490 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் சிறப்பிடம் வகிக்கிறாா். சிபிஎஸ்இ 12- ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் மாணவா் எம். ஸ்ரீதரன் 500 -க்கு 460 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் சிறப்பிடம் வகிக்கிறாா். மேலும், பள்ளியில் 10, 12 -ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தோ்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா்.
பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் கல்வி ஆலோசகா் அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா, பள்ளியின் முதல்வா், ஆசிரியா்கள் பாராட்டினா்.