ஸ்வியாடெக், நவாரோ வெற்றி
ஜொ்மனியில் நடைபெறும் பேட் ஹோம்பா்க் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் எம்மா நவாரோ ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.
ரவுண்ட் ஆஃப் 16-இல், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் ஸ்வியாடெக் 6-4, 6-4 என்ற நோ் செட்களில் பெலாரஸின் விக்டோரியா அஸரென்காவை சாய்த்தாா். 5-ஆம் இடத்திலிருக்கும் நவாரோவும் அதே செட்களில், ஜப்பானின் நவோமி ஒசாகாவை தோற்கடித்தாா்.
இதையடுத்து காலிறுதியில் ஸ்வியாடெக் - ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவுடனும், நவாரோ - அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவுடனும் மோதுகின்றனா். முன்னதாக அலெக்ஸாண்ட்ரோவா 6-3, 6-7 (2/7), 6-3 என்ற கணக்கில் கிரீஸின் மரியா சக்காரியை வீழ்த்தினாா்.
7-ஆம் இடத்திலிருந்த உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6-3, 4-6, 6-7 (7/9) என்ற செட்களில் பிரேஸிலின் பீட்ரிஸ் ஹட்டாட் மாயாவிடம் தோற்றாா். மாயா தனது காலிறுதியில் இத்தாலியின் ஜாஸ்மின் பாலினியுடன் மோதுகிறாா்.