ஹன்சிகாவுடன் விவாகரத்தா? கணவர் பதில்!
நடிகை ஹன்சிகா குறித்த விவாகரத்து செய்திகளுக்கு அவரது கணவர் பதிலளித்துள்ளார்.
நடிகை ஹன்சிகா மோத்வானி கடந்த 2022 டிசம்பரில் தொழிலதிபர் சோஹல் கதூரியா என்பவரை மணம் முடித்தார். தொடர்ந்து, மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கி இருவரும் குடியேறினர்.
இதற்கிடையே, ஹன்சிகாவும் அவரது அம்மாவும் தன்னைக் கொடுமைப்படுத்தியதாக ஹன்சிகாவின் நாத்தனார் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த நிலையில், ஹன்சிகா கடந்த சில மாதங்களாகத் தன் கணவரைப் பிரிந்து அம்மா வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் ஹன்சிகா விவாகரத்து முடிவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து ஹன்சிகா கருத்து தெரிவிக்காமல் இருந்த நிலையில், மும்பை காவல்துறை ஹன்சிகாவின் கணவர் சோஹல் கதூரியாவிடம் விசாரித்தபோது, ‘விவாகரத்து தகவல் உண்மையில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.
ஹன்சிகாவின் தோழியின் கணவரான சோஹலுக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சூர்யா பிறந்தநாளையொட்டி வெளியாகும் ‘கருப்பு’ டீசர்!