ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா காலமானார்
இந்திய தேசிய லோக் தள தலைவரும் ஹரியாணா மாநில முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 89.
குருகிராமில் உள்ள அவரது இல்லத்தில், இன்று காலை மாரடைப்பால் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓம் பிரகாஷ் சௌதாலா, ஹரியாணா மாநிலத்தின் முதல்வராக 1989ஆம் ஆண்டு முதல் நான்கு முறை பதவி வகித்து சாதனை படைத்தவர். அவர் கடைசியாக மாநில முதல்வராக 1999ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.