ஊராட்சி பகுதிகளில் சொத்துவரி உயா்வை திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
ஹார்வர்ட் பல்கலைக் கழகத்துக்கு ட்ரம்ப் அதிரடி உத்தரவு; பெல்ஜிய இளவரசியின் படிப்பு என்னவாகும்?
அமெரிக்காவின் பிரபலமான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டில் இருந்து மாணவர்கள் சேர்வதற்கு ட்ரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் காஸா போர் உள்ளிட்ட விவாகரங்களை கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்கள் நடத்தியதை அடுத்து ட்ரம்ப் இதுபோன்ற அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
389 ஆண்டுகள் பழமையான இந்த பல்கலைக்கழகம் உலகின் பிரபலமான பல்கலைக்கழகமாக கருதப்படுகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்வதற்கு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்ததை பல்கலைக்கழகம் ஏற்க மறுத்தது.
இதனால் பல்கலைக்கழகத்திற்கு வரவேண்டிய 2.2 பில்லியன் டாலர் நிதியும், 60 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தையும் டிரம்ப் நிறுத்தினார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டில் இருந்து ஆண்டுக்கு சுமார் 800 பேர் சேர்ந்து பயின்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வருங்கால ராணியான 23 வயதான இளவரசி எலிசபெத் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தனது முதலாம் ஆண்டு படிப்பை முடித்துள்ளார்.
இதற்கிடையில் ட்ரம்ப் நிர்வாகம் அங்கு படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்தது, இலவரசியின் தொடர்ச்சியான படிப்பை பாதிக்க கூடும் என்று பெல்ஜிய அரசு அரண்மனையின் செய்தி தொடர்பாளர் லோட் வான்டோர்ன் கூறியிருக்கிறார்.

செய்தி தொடர்பாளர் லோட் வான்டோர்ன் இது குறித்து கூறுகையில் "இளவரசி எலிசபெத் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கையை பயின்று வருகிறார் இது இரண்டு வருடம் முதுகலை படிப்பாகும். தற்போது இருக்கும் நிலை குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம், வரும் நாள்களில் இன்னும் நிறைய நடக்கலாம். ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவின் தாக்கம், வரும் நாள்களில் தான் தெளிவாக தெரியும்” என்று அவர் கூறியிருந்தார்.
இளவரசி எலிசபெத், பெல்ஜிய அரியணையின் வாரிசான மன்னர் பிலிப் மற்றும் ராணி மதில்டே ஆகியோருக்கு பிறந்த நான்கு குழந்தைகளில் மூத்தவர் ஆவார். ஹார்வர்டில் சேர்வதற்கு முன்பு இவர் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் அரசியல் பட்டம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.