செய்திகள் :

"ஹாலிவுட் போல சண்டைக் காட்சிகள்; மோகன் ராஜ் போல இனி யாரும் பலியாகக் கூடாது" - தயாரிப்பாளர்கள் சங்கம்

post image

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டுவம்'. இதன் படப்பிடிப்பு நாகப்பட்டினம் கீழையூரில் நடைபெற்றக் கொண்டிருக்கிறது. இப்படப்பிடிப்பில் மோகன் ராஜ் (வயது 52) என்ற சீனியர் ஸ்டண்ட் கலைஞர் சண்டைக் காட்சியின் போது உயிரிழந்திருக்கிறார்.

சீனியர் ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜ்

விபத்தின் சண்டைக் காட்சியைப் படமாக்கும்போது மோகன் ராஜ் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இது தமிழ்த் திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அவருடன் பணியாற்றியவர்கள் தங்களது வருத்தங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், "திரு. மோகன் ராஜ் அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம். அவரின் குடும்பத்திற்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இரங்கலை தெரிவிக்கும் இந்த நேரத்தில்,

இது போன்ற விபத்துகள் இனி தமிழ் திரைப்பட தயாரிப்புகளில் நடக்காமல் இருக்க, தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், ஸ்டண்ட் மாஸ்டர்-களும், சண்டை கலைஞர்களும் மேலும் சிறப்பான முன்னேற்பாடுகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்

பார்வையாளர்களை கவர நம் திரைப்படங்களில் உலக தரத்திற்கு ஹாலிவுட் போல சண்டைக்காட்சிகள் இடம்பெற முயற்சிப்பது அவசியம். அதே சமயம், ஹாலிவுட் படப்பிடிப்புகளில் செய்யப்படும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் நம் படப்பிடிப்புகளில் செய்த பின் தான், சண்டை காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற வேண்டும். இன்னொமொரு கலைஞனின் உயிர் பலியாகாமல் தடுக்க, நாம் அனைவரும் இனிமேல் இதை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Suriya : டீசர், டைட்டில், ரீ-ரிலிஸ்... 50வது பிறந்தநாளில் காத்திருக்கும் ஆச்சரியங்கள்!

சூர்யாவின் ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமான மாதம். இந்த ஜூலை 23-ம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் வருகிறது. அதிலும் இது அவரது 50-வது பிறந்தநாள் என்பதால் இன்னும் ஸ்பெஷலான, ஆச்சரியமான அப்டேட்கள் வெளிவரக் காத்... மேலும் பார்க்க

Riythvika: வைரலாகும் 'பிக் பாஸ்' ரித்விகா நிச்சயதார்த்த க்ளிக்ஸ்! | Photo Album

Kiara Advani: "எங்கள் மனம் நிறைந்திருக்கிறது!" - கியாரா, சித்தார்த் தம்பதிக்கு பெண் குழந்தைசினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglRசினிமா தொடர்பான எக்ஸ்... மேலும் பார்க்க

கமல்ஹாசன்-ரஜினிகாந்த் சந்திப்பு; "புதிய பயணத்தை நண்பருடன் பகிர்ந்தேன்" - பதவியேற்பு குறித்து கமல்!

தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை மாதத்தோடு முடிவடைய உள்ளது. இந்நிலையில் தி.மு.க சார்பில், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர். வில்சன், கவிஞர் சல்மா, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர... மேலும் பார்க்க

"எம்.ஜி.ஆர் பற்றி சரோஜா அம்மா சொன்னது; 'ஆதவன்' படத்தில் நடந்ததை மறக்க முடியாது"- கே.எஸ்.ரவிக்குமார்

1960- 70 காலக்கட்டங்களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த சரோஜா தேவி உடல்நலக் குறைவால் நேற்று (ஜூலை 14) காலமானார். சினிமா மட்டுமன்றி தன் வாழ்வில் பொதுசேவையும் செய்து வந்த அவரின் கண்கள் தானம் செய்யப்பட்டிர... மேலும் பார்க்க