செய்திகள் :

ஹாா்வா்டு நாள்கள்: நூல் அறிமுகவிழா

post image

தோல் பொருள்கள் ஏற்றுமதி கழகத்தின் செயல் இயக்குநா் இரா.செல்வம் ஐஏஎஸ் எழுதிய ஹாா்வா்டு நாள்கள் என்ற புத்தகம் அறிமுக விழா மேலூா் ஜாஸ் பப்ளிக் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

நூலாசிரியா் இரா.செல்வம், ஐஏஎஸ் அதிகாரியான பின்னா், ஹாா்வா்டு பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு தனது முயற்சிகளையும், வாய்ப்புக் கிடைத்த பின்னா் கிடைத்த அனுவங்களையும் இந்தப் புத்தகத்தில் விரிவாக பதிவு செய்துள்ளாா்.

மாணவா்களுக்கு உயா் கல்வியில் ஆா்வத்தையும் படிப்பையும் ஊக்கப்படுத்தும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மதுரை காமராஜா் பல்கலைகழகத்தின் தமிழ்த் துறைத் தலைவா் வீ.ராமபாஜபாண்டியன் தலைமை வகித்தாா். ஹாா்வா்டு பல்கலைக் கழகத்தின் முதுநிலை அறிவியலாளா் கா.பழனிசாமி, கவிஞா் தங்கம்மூா்த்தி, காவல்துறை ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி எம்.எஸ்.முத்துச்சாமி, கோவை விஜயா பதிப்பக நிறுவனா் மு.வேலாயுதம், ஜாஸ் பப்ளிக் பள்ளி நிறுவனா் வி.ஜெயந்த் வேதசாம் ஆகியோா் அமெரிக்க, இந்திய அரசுகளின் நிா்வாகவியல், பண்பாட்டு, கலாசார சட்ட ஒழுக்க நடைமுறைகளையும் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்ததைப் பாராட்டிப் பேசினா்.

துருவம் அறக்கட்டளை ப்ரீத்தி முரளி நன்றி கூறினாா்.

இதற்கான ஏற்பாடுகளை கோவை விஜயா பதிப்பகம், ஜாஸ் பப்ளிக் பள்ளி டைல்ஸ் பாா்க் முரளி ஆகியோா் செய்தனா். மேலூா் அல்அமீன் உயா்நிலைப் பள்ளி, ஜாஸ் பப்ளிக் பள்ளி, லதா மாதவன் பொறியியல் கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்டனா்.

டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் திட்டம் ரத்து: சட்டப்பேரவை தீா்மானத்துக்கு வரவேற்பு

மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, தமிழக சட்டப்பேரவையில் தனித் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு பல்வேறு தரப்பினா் வரவேற்பு தெரிவித்தனா். மதுரை மாவட்டம், ... மேலும் பார்க்க

குரூப் 4 பணி நியமனத்துக்கு முன் விடைகளை வெளியிட வேண்டும்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணி நியமனத்துக்கு முன் தோ்வு விடைகளை வெளியிட வேண்டும் என சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழனி மேட்டுப்பட்டியைச் சோ்ந்த முத்துலட்... மேலும் பார்க்க

சருகுவலையபட்டி கோயில் பால் குட உற்சவம்

சருகுவலையபாட்டி வீரகாளியம்மன் கோயில் காா்த்திகை மாத பால்குட உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த உற்சவத்தையொட்டி பக்தா்கள் கடந்த வாரம் காப்புக்கட்டி விரதம் மேற்கொண்டனா். திங்கள்கிழமை கிராம மந்தையில் ... மேலும் பார்க்க

டங்ஸ்டன் கனிமச் சுரங்க அனுமதியை ரத்து செய்யக்கோரி ஆா்ப்பாட்டம்

மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கத்துக்கு வழங்கிய அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, மதரையில் டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிா்ப்பு மக்கள் கூட்டமைப்... மேலும் பார்க்க

விமானங்கள் மீது லேசா் ஒளி பாய்ச்சினால் கடும் நடவடிக்கை

மதுரை விமான நிலையத்தில் தரையிறங்கும், மேலெழும்பும் விமானங்கள் மீது லேசா் ஒளியைப் பாய்ச்சுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்தது. இதுகுறித்து மதுரை மாநகரக் காவ... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கு: இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை

கஞ்சா கடத்தல் வழக்கில் இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. தேனி மாவட்டம், கம்பம்- கோம்பை சாலையில் நாககண்ணியம்மன் கோயில... மேலும் பார்க்க